அம்மா உணவகசீரமைப்பு! முதலமைச்சர் விஜய்க்குக் கிடைத்த பொருத்தமான பாராட்டு!

அம்மா உணவகசீரமைப்பு! முதலமைச்சர் விஜய்க்குக் கிடைத்த பொருத்தமான பாராட்டு!

“மக்களுக்கான ஒரு உன்னத திட்டமான  அம்மா உணவக ங்களை மறுசீரமைப்பு செய்ய உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் விஜய்க்கு எனது இதயபூர்வமான பாராட்டுகள்” என்று சென்னை  பெருநகர முன்னாள் மேயரும் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அரசுப்பணிகளுக்கான பயிற்சியை இலவசமாக அளித்துவரும் மனித நேய அறக்கட்டளை தலைவருமான  சைதை துரைசாமி தெரிவித்து உள்ளார்.

மக்களின் ஆதங்கம்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று   ‘அம்மா உணவகம்’ என்ற சிறப்பான திட்டத்தை துவங்கிவைத்தார்.  மூன்று வேளையும் தரமான உணவு சுவையுடன் மலிவு விலையில் வழங்கப்பட்டது. இதனால் எளிய மக்கள் பயனடைந்தனர்.

கடந்த தி.மு.க. ஆட்சியிலும் இத்திட்டம் தொடர்ந்தாலும், “உணவின் தரம் குறைந்துவிட்டது” என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்தன.

இந்நிலையில் தவெக தலைமையில் புதிய ஆட்சி உருவானது. கடந்த 10ம் தேதி, ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.  அம்மா உணவங்களில் உணவு தரமாக இல்லை என்ற புகார் அவர் கவனத்துக்குச் சென்றது.

முதலமைச்சர் அதிரடி!  

உடனடியாக முதலமைச்சர் ஜோசப் விஜய், துறைச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனையில் இறங்கினார். பிறகு, “பொதுமக்களுக்குச் சுவையான, தரமான உணவுகள் தங்கு தடையின்றிக் கிடைக்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு, “அம்மா உணவகங்களில் சமையலுக்குத் தேவையான புதிய உபகரணங்கள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படும். இந்த மறுசீரமைப்பு மற்றும் கொள்முதல் பணிகளுக்கான செலவினங்களை, அந்தந்த மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டும்!” என முதலமைச்சர்  ஆணையிட்டுள்ளார்.

பொருத்தமானவரின் பாராட்டு! 

இதையடுத்து,  மனிதநேயர் சென்னை பெருநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முதலமைச்சர் ஜோசப் விஜயை பாராட்டி உள்ளார். அவர், “மக்களுக்கான ஒரு உன்னத திட்டமான  அம்மா உணவக ங்களை மறுசீரமைப்பு செய்ய உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் விஜய்க்கு எனது இதயபூர்வமான பாராட்டுகள்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்.

பல்வேறு மக்கள் பணிகளை செய்துவரும் சைதை துரைசாமி, எளிய மக்களின் பசி போக்க,  சைதை பகுதியில் ‘மனிதநேய மலிவுவிலை உணவகத்தை’ 2007ம் ஆண்டே தொடங்கியவர். லாப நோக்கம் இல்லாமல், பசி இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில், தனது சொந்த நிதி மற்றும் அறக்கட்டளை பங்களிப்புடன் இந்தத் திட்டத்தை அவர் தொய்வின்றி நடத்திக் காட்டினார்.

2011ல் சென்னை பெருநகர மேயர் பொறுப்பை ஏற்றவுடன்,  மாநகர அலுவலகமாக ரிப்பன் கட்டிடத்திலும் மலிவு விலை உணவகத்தைத் துவங்கினார்.

அம்மா உணவகம்!

எளிய மனிதர்களின் பசி போக்கும் சைதை துரைசாமியின் இந்த முயற்சிகளை  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நெகிழ்ந்து பாராட்டினார். அது மட்டுமல்ல.. அதே  பாணியில் மேலும் பலரின் பசி போக்க,  மலிவு விலை உணவகம் திறக்க முடிவு செய்தார்.

இப்படி உருவானதுதான்  ‘அம்மா உணவகம்’ திட்டம்.   2013-ஆம் ஆண்டு சென்னை சாந்தோம் பகுதியில் முதல் உணவகத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார். மேயர் சைதை துரைசாமி தலைமையிலான சென்னை மாநகராட்சிதான் இத்திட்டத்தை முதன்முதலில் முழுமையாகச் செயல்படுத்தியது.

இந்நிலையில், “மக்களுக்கான ஒரு உன்னத திட்டமான  அம்மா உணவக ங்களை மறுசீரமைப்பு செய்ய உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் விஜய்க்கு எனது இதயபூர்வமான பாராட்டுகள்”  என மனதார வாழ்த்தி இருக்கிறார் சைதை துரைசாமி.

முதலமைச்சர் ஜோசப் விஜயின் சரியான நடவடிக்கைக்காக, சரியான நபரிடமிருந்து சரியான நேரத்தில் வந்திருக்கும் பாராட்டு இது!

Related Posts