‘காண்பதெல்லாம் மறையுமென்றால்..”: ‘ராஜபார்வை’ கமலிடம் விழி மாற்றுத் திறனாளிகளின் வெற்றிச் சரித்திரம்!

‘காண்பதெல்லாம் மறையுமென்றால்..”: ‘ராஜபார்வை’ கமலிடம் விழி மாற்றுத் திறனாளிகளின் வெற்றிச் சரித்திரம்!

த்திரிகை, அறிவியல், சட்டம், அரசு உயர் பதவிகள் எனப் பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஆன்ம விழிகளைப் பதிக்காத இடங்களே இல்லை.

இப்படிச் சவால்களைச் சாதனைகளாக்கிய இருபத்தாறு பார்வை மாற்றுத்திறனாளி வெற்றியாளர்களின் வாழ்வியலைச் சுவாரசியமாகப் பேசுகிறது, ‘காண்பதெல்லாம் மறையுமென்றால்’ நூல்.

கோமதி பெருமாள் எழுதிய இந்நூலை,  மெய்பொருள் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.  இந்தப் படைப்பு,  அச்சு வடிவில் மட்டும் மின்னவில்லை; விழியிழந்தோர் வாசிப்பிற்கு ஏதுவாகப் பிரெய்லி முறையிலும் வசீகரிக்கிறது. சாதனைச் சரித்திரங்களைச் சரிசமமாக எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும் மகத்தான முயற்சி இது!‘காண்பதெல்லாம் மறையுமென்றால்’ என்ற பாரதியின் வரிகளைத் தலைப்பாகக் கொண்டிருப்பது சிறப்பு. ஆம், மகாகவியின் அடுத்த வரி, ‘மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?’ என்பதுதானே! அந்த வரிகளுக்குச் சாட்சியாகவே இந்தப் பார்வை மாற்றுத்திறனாளிகள் உயர்ந்து நிற்கிறார்கள்!

அவர்களில் சிலரது சாதனையை தொகுத்துத் தந்திருக்கிறது புத்தகம். இதை, நூலாசிரியர் கோமதி பெருமாள், நடிகர் கமல்ஹாசனிடம் அன்பளித்தார்.  கமல்,  ராஜபார்வை என்ற திரைப்படத்தில் பார்வை சவால் உள்ள பாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. அதோடு,  படைப்புகளை நேசிப்பவர், உருவாக்குபவர். அவரிடம் புத்தகத்தை அளித்தது பொருத்தம்தான்.

விழிச் சவால் உள்ளோரின் சாதனைகளை அறியவும், புத்தகம் பெறவும் தொடர்புகொள்ளுங்கள்:

மெய்பொருள் பதிப்பகம்: 93636 87259

Related Posts