கமல்ஹாசனின் “தலைவன் இருக்கின்றான்”: தமிழகத்தின் வெற்றி முழக்கம்!

கமல்ஹாசனின் “தலைவன் இருக்கின்றான்”: தமிழகத்தின் வெற்றி முழக்கம்!

2026 தேர்தலுக்கான, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக “தலைவன் இருக்கின்றான்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு பிரச்சாரப் பாடலை எழுதி, பாடி கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

பறை ஒலிக்க, திராவிட சிங்கத்தின் கர்ஜனையாகப் பாடல் தொடங்குகிறது. இந்திய நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் எங்களின் தலைவன் இருக்கிறான்; அவன் எதிர்காலத்தை மாற்றும் படையாய் நிற்கிறான் என்ற செய்தி அழுத்தமாகப் பதிகிறது.“வெல்லும் படை இது விலகிடு விலகிடு” என வெற்றியை நோக்கி நகரும் இந்தப் படையைக் கண்டு எதிரிகள் ஒதுங்கிப் போகட்டும் என்ற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. “என்றும் நமதே… நாளை நமதே” எனத் தமிழகத்தின் எதிர்காலம் நம் கைகளில் என்பதை உறுதிப்படுத்தும் முழக்கம் பாடலில் தெறிக்கிறது.

தமிழகம் எப்போதும் வென்றிட வேண்டும்; அது வேராக, விதையாக, செடியாக, மரமாக, காடாக வளர்ந்து உலகமெங்கும் விரிந்திட வேண்டும் என்ற வாழ்த்துடன் பாடல் உணர்ச்சிபெறுகிறது. மண்ணைத் தொட்டுச் செய்யும் சத்தியமாக, நீதி வெல்லும் வரை சாகும் வரையிலும் இந்தப் போராட்டம் தொடரும் என்ற உறுதிமொழி பாடலில் எதிரொலிக்கிறது.

“தமிழே எழுவாய், தமிழே வெல்வாய்” என்ற உத்வேகத்துடன், நல்லுள்ளங்கள் அனைவரும் இந்தப் பாடலைப் பரவச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளுடன் பாடல் நிறைவடைகிறது.

இப்பாடலை இங்கே காணலாம்: https://youtu.be/L3LYzZHYmKo

Related Posts