‘பிரேக்ஃபாஸ்ட்’: மாடர்ன் காதலின் கலர்ஃபுல் கொண்டாட்டம்!
பிக் பாஸ் சீசன் 8 வீட்டின் செல்லப்பிள்ளை ராணவ், இப்போது வெள்ளித்திரையின் ‘சாக்லேட் பாய்’ ஆக அவதாரம் எடுக்கிறார்! ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ என உணர்வுகளோடு விளையாடும் இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் லேட்டஸ்ட் மேஜிக் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் ஹீரோவாக மாஸ் எண்ட்ரி கொடுக்கிறார் ராணவ்.
“காந்தி கிருஷ்ணா சார் படத்துல நடிக்கிறது என் லைஃப் டைம் செட்டில்மென்ட் கனவு! இந்தப் படம் வெறும் சினிமா இல்லை; இன்றைய காலத்து ரிலேஷன்ஷிப்ல இருக்கிற காதல், குழப்பம், ஈகோ என எல்லாத்தையும் அக்குவேறு ஆணிவேறா அலசப்போகுது. மாடர்ன் காதல்ல இருக்கிற சிக்கல்களை அப்படியே கண்ணாடி மாதிரி திரையில பார்க்கலாம். ரசிகர்கள் கண்டிப்பா இந்த உணர்வுப்பூர்வமான பயணத்துல தங்களை ஐக்கியப்படுத்திக்கிப்பாங்க!” என செம்ம எனர்ஜியோடு கூறுகிறார் ராணவ்.
ரோஸ்மின் கதாநாயகியாக நடிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், வைரமுத்து – விவேக் வரிகளில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், குகன் விநியோகத்தில் உருவாகியுள்ள இந்த ‘மாடர்ன் லவ்’ விருந்து வரும் ஏப்ரல் 24 முதல் தியேட்டர்களில் பட்டையைக் கிளப்ப வருகிறது!
இன்றைய தலைமுறை காதலின் புதுப் பரிமாணத்தைப் பார்க்க ரெடியா?
