ரீமா சென், தமன்னா வரிசையில்… ‘பிரேக்ஃபாஸ்ட்’ ரோஸ்மின்!
செல்லமே’ ரீமா சென், ‘ஆனந்த தாண்டவம்’ தமன்னா வரிசையில்… இதோ காந்தி கிருஷ்ணாவின் அடுத்த ‘கியூட்’ மேஜிக்! ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் மூலம் கோலிவுட்டில் அதிரடியாக எண்ட்ரி கொடுக்கிறார் மாடல் அழகி ரோஸ்மின்.

சும்மா வந்துட்டுப் போகும் ஹீரோயின் சப்ஜெக்ட் இல்லை இது; கதையையே தாங்கிப் பிடிக்கும் செம்ம வெயிட்டான கேரக்டராம். “காந்தி கிருஷ்ணா சார் படத்துல நடிக்கிறதே ஒரு தனி பெருமைதான். இந்தப் படத்துல கியூட்டான ரொமான்ஸ் மட்டும் இல்லாம, மனசைத் தொடுற எமோஷனல் மொமெண்ட்ஸும் தெறிக்கவிட்டிருக்கோம். ரசிகர்கள் கண்டிப்பா இந்த ரோஸ்மினை கொண்டாடுவாங்க!” என செம்ம கான்பிடென்ட்டாகப் பேசுகிறார் ரோஸ்மின்.
ராணவ் – ரோஸ்மின் ஜோடியுடன் சம்பத் குமார், கஸ்தூரி எனப் பெரிய பட்டாளமே நடித்துள்ள இந்தப் படத்திற்கு, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, வைரமுத்து – விவேக் வரிகள் உயிர் கொடுத்திருக்கிறார்கள். கிரிஜா வரதராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த பக்கா ரொமாண்டிக் ட்ரீட், வரும் ஏப்ரல் 24 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது!
கெட் ரெடி ஃபார் எ லவ்லி ‘பிரேக்ஃபாஸ்ட்’!
