மகா அவதார் பரசுராம்: ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த ‘வெறித்தனமான’ ஆட்டம் ஆரம்பம்!
‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ என இந்திய சினிமாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ், இப்போது புராண இதிகாசங்களை ரத்தமும் சதையுமாக திரையில் கொண்டு வரத் தயாராகிவிட்டது.
பரசுராம ஜெயந்தியின் மங்கலமான இந்த நாளில், தங்களின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான “மகா அவதார் பரசுராம்” படத்தின் அதிரடியான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
யுனிவர்ஸ் அதிரப்போகுது!
சமீபத்தில் ‘மகா அவதார் நரசிம்மா’ படத்தை அறிவித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியப்பட வைத்த ஹோம்பாலே, இப்போது தனது “மகா அவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்”-இன் அடுத்த நாயகனை களம் இறக்கியுள்ளது. அஷ்வின் குமார் இயக்கத்தில், க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாகும் இந்தப் படம், விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் வீரத்தையும் ஆக்ரோஷத்தையும் கண்முன் நிறுத்தப்போகிறது.
தொழில்நுட்பத் திருவிழா
-
அனிமேஷன் மேஜிக்: அதிநவீன அனிமேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நமது கலாச்சார வேர்களை உலகத்தரம் வாய்ந்த காட்சிகளாக மாற்றப்போகிறார்கள்.
-
புதிய தலைமுறைக்கு: பழைய புராணக் கதைகளை இன்றைய தலைமுறை கொண்டாடும் வகையில், ஒரு கம்ப்யூட்டர் கேம் போன்ற விறுவிறுப்புடன் இந்தப் படம் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
-
வெளியீடு: இந்த விஷுவல் ட்ரீட் வரும் டிசம்பர் 2027-இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
மகா அவதார் யுனிவர்ஸில் அடுத்து என்ன வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே பற்றிக்கொண்டுள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் மீண்டும் ஒருமுறை இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்துவது உறுதி!
