‘நாங்க இருக்கோம்’: 18+ அவசியம் பார்க்க வேண்டிய குறும்படம் இதோ!
சட்டமன்றத் தேர்தல் திருவிழா தமிழ்நாட்டைத் தழுவிக் கொண்டிருக்கும் வேளையில், வாக்காளர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப ‘நாங்க இருக்கோம்’ என்கிற குறும்படம் அதிரடியாகக் களம் இறங்கியிருக்கிறது!
வழக்கமாக தேர்தல் விழிப்புணர்வு படம் என்றால், மக்களை குற்றம் சாட்டுவது போல இருக்கும். “வாக்களிக்காமல் இருப்பது தவறு”, “பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது தவறு” என்றெல்லாம் அறிவுரை சொல்வார்கள். இந்த குறும்படம், அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்கள், அவர்களைப் புரிந்துகொள்ளுங்கள் என்கிறது.
அதுவும் அந்த ஆரம்பக் காட்சி, அரசியல்வாதிகள் எதற்கும் ரெடி என்பதை நச் என சொல்கிறது. இறுதி காட்சி இன்னும் அற்புதம்.
சினிமா போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் சக்கைப்போடு போடும் ‘லைட்ஸ் ஆன் மீடியா’ நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான வெங்கி சந்திரசேகர், கதை எழுதி இயக்கி உள்ளார்.
‘முதலும் நீ முடிவும் நீ’ படத்தில் தனது கலகலப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த கௌதம், இதில் கதையின் நாயகனாகத் தோன்றி கணம் கூட்டுகிறார். ஒளிப்பதிவில் ஜெய் வித்தை காட்ட, அரவிந்தனின் படத்தொகுப்பும் அவினாஷின் இசையும் குறும்படத்துக்கு முழு நீள பட எஃபெக்ட் கொடுக்கின்றன.
“ஓட்டுப்போடுவது முக்கியம்” என்பதோடு, “எப்படிப்பட்டவருக்கு வாக்களிக்க வேண்டும்” என்பதைச் சொல்லும் படம்!
அவசியம் பாருங்கள்..
https://www.youtube.com/watch?v=h5OHXjkAgbA
