கண்ணையும் கருத்தையும் கவர்ந்த கண்ணதாசன் விழா: “சுடர்கவி”, “வாழ்வியல் வழிகாட்டி” விருதுகளால் ஜொலித்த ஆளுமைகள்!
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 13.04.2026 அன்று மாலை, கவியரசு கண்ணதாசனின் புகழைப் பாடும் “தாலாட்டும் பூங்காற்று” நூல் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது! கவிஞர் காவிரிமைந்தன் எழுதி, கங்கை பதிப்பகம் வெளியிட்ட இந்த அருமையான நூலை, திரு. லஷ்மிநாதன் வெளியிட, அதன் முதல் பிரதியை இலங்கையைச் சேர்ந்த திரு. செல்வரத்னம் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்) சார்பில், தமிழுக்கும் கலைக்கும் தொண்டாற்றும் ஆளுமைகளுக்கு கௌரவ விருதுகள் வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டது:
-
தமிழ்ப் பணிகளுக்காகவும், ஊக்கமளிக்கும் செயல்பாடுகளுக்காகவும் கவிஞர் லஷ்மிநாதன் அவர்களுக்கு “சுடர்கவி” விருது வழங்கப்பட்டது.
-
இலங்கையைச் சேர்ந்த கவிஞர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர் திரு. செல்வரத்தினம் (செல்வா) அவர்களுக்கு “வாழ்வியல் வழிகாட்டி” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
-
திரைத்துறையில் மக்கள் தொடர்புப் பணியில் முத்திரை பதித்து வரும் திரு. நிகில் முருகன் அவர்களுக்கு “மக்கள் தொடர்பு மாமணி” விருது வழங்கப்பட்டது.
மேடையில் அணிவகுத்த முக்கியப் பிரமுகர்கள்: திரு. ஆர். பத்மநாபன், திரு. பால சீனிவாசன், திரு. பி.வி. வைத்தியலிங்கம், திரு. ரவி தமிழ்வாணன், திரு. செல்வரத்னம், கவிஞர் காவிரிமைந்தன், திரு. லஷ்மிநாதன், திரு. நிகில் முருகன், திருமதி. வெண்ணிலா காமராஜ், திருமதி. கல்யாணி ஸ்ரீதர், திருமதி. ஸ்ரீதேவி துரை அரசு மற்றும் திரு. அந்தமான் கிருஷ்ணமூர்த்தி எனப் பல்துறை வித்தகர்கள் இந்த விழாவை அலங்கரித்தனர்.
கண்ணதாசனின் கவிதை மணம் கமழ, தமிழுக்கு மகுடம் சூட்டும் விழாவாக இது அமைந்தது!
