ஏறி வந்தோம் ஐயப்பா…: பக்தி வைப்பில் அதிரும் யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’ பாடல் ரிலீஸ்!
காமெடி கிங் யோகி பாபு இப்போது ஆன்மீக ரூட்டில் அதிரடி காட்ட வருகிறார்! ‘சன்னிதானம் பிஓ’ படத்தின் முதல் பாடலான “ஏறி வந்தோம் ஐயப்பா” வெளியாகி, இப்போது இணையதளமெங்கும் பக்தி மணம் வீசி வருகிறது. ஐயப்ப பக்தர்களின் மனதை உருக வைக்கும் இந்தப் பாடலை மோகன் ராஜன் எழுத, ஏ.ஜி.ஆரின் இசையில் அபிஷேக் ராஜு மற்றும் விஷ்ணு ராம் ஆகியோர் மெய்சிலிர்க்கப் பாடியுள்ளனர்.
இயக்குநர் சேரன் மற்றும் மஞ்சு வாரியர் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை, இந்தப் பாடல் இப்போது இரட்டிப்பாக்கியுள்ளது. அமுத சாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், சபரிமலை யாத்திரையில் நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவத்தையும், அதன் பின்னணியில் உள்ள ஆழமான மனித உணர்வுகளையும் பேசுகிறது.
யோகி பாபுவுடன் ரூபேஷ் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்துள்ள இந்தப் படம் பம்பை, எருமேலி என நிஜமான புண்ணியத் தலங்களில் படமாக்கப்பட்டுள்ளது. சர்வதா சினி கரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என 4 மொழிகளில் மே மாதம் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.
சாமி பக்தர்களுக்கு ஒரு சூப்பர் ட்ரீட் வெயிட்டிங்… சாமியே சரணம் ஐயப்பா!
