நீளிரா: விமர்சனம்: ஒரு போர்க்கால இரவின் உறையவைக்கும் நிஜம்!

நீளிரா: விமர்சனம்: ஒரு போர்க்கால இரவின் உறையவைக்கும் நிஜம்!

ழப் போர்ச் சூழலை மையமாக வைத்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நீளிரா’. நீண்ட இரவு என்பதைத்தான் இயக்குனர் சோமிதரன் இப்படிச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.

ஆரம்பகாலத்திலிருந்தே ஈழத்து வலிகளை தனது படைப்பில் பதிவு செய்யத் துடிக்கும் கார்த்திக் சுப்புராஜ், இம்முறை ஒரு தயாரிப்பாளராகப் பின்நின்று இக்கதையைத் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

களம்  

இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்த எண்பதுகளின் பிற்பகுதி. அங்கே ஒரு தமிழ் வீட்டின் திருமண முன்னேற்பாடுகள். ஆனால் அந்த வீட்டைச் சுற்றி ஒருபுறம் சிங்கள ராணுவம், மறுபுறம் தமிழ்ப் போராளிகள், இடையில் இந்திய அமைதிப்படை என மூன்று முனைகளில் போர் நெருக்கடி. இந்த இக்கட்டான சூழலில் அந்த ஒரு நீண்ட இரவில் அக்குடும்பம் எதிர்கொண்ட சவால்களே மீதிக்கதை.


நடிகர்களின் பங்களிப்பு

நவீன் சந்திரா மற்றும் சனந்த் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்திருக்கிறார்கள். கபிலா வேணுவின் நடிப்பு தனித்து நின்றாலும், காலில் காயம்பட்டவர் மறுநாள் சாதாரணமாக நடப்பது போன்ற சில தர்க்கப் பிழைகள் துருத்திக்கொண்டு தெரிகின்றன. மணப்பெண் ரூபா கொடுவாயூர் அந்தப் பதட்டமான சூழலைச் சரியாகப் பிரதிபலிக்கிறார்.

நிறைகள்

  • யதார்த்தம்: போராளிகள் என்றாலே அவர்களுக்கு காதல் உணர்வே இருக்காது என்கிற மூட நம்பிக்கையை உடைத்திருக்கிறார் இயக்குநர்.  போர்க்களத்தில் இருக்கும் ஒரு வீரன் அதன் காதலை எண்ணியும் உருகுவது யதார்த்தத்திற்கு நெருக்கமாக இருக்கிறது.

  • தொழில்நுட்பம்: இரவின் பின்னணியில் படமாக்கப்பட்டிருந்தாலும், குழப்பமில்லாத ஒளிப்பதிவு மற்றும் உணர்வுப்பூர்வமான பின்னணி இசை ஆகியவை படத்திற்கு உயிரூட்டுகின்றன.

  • குறை: இந்திய அமைதிப்படை அங்கே நிகழ்த்தியதாக நாம் அறிந்த வரலாற்றுத் தரவுகளுக்கும், படத்தில் காட்டப்படும் அமைதியான போக்கிற்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. நாயகன் நல்லவராக இருக்க வேண்டும் என்ற சினிமாத்தனமான கட்டாயம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

இறுதியாக…

படம் முழுக்க கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் பல இடங்களில் ஒரு உரையாடலாக இல்லாமல், அந்தக்கால அரசியல் சூழலை விளக்கும் நாடகத்தன்மையுடன் முடிகின்றன. குறிப்பாக, விடிந்தவுடன் போர்க்களத்தில் இருக்கும் வீரர்கள் காட்டும் அலட்சியப்போக்கு மற்றும் சில உணர்ச்சிவசப்பட்ட காட்சிகள் நம்பகத்தன்மையைக் குறைக்கின்றன.

மொத்தத்தில், ‘நீளிரா’ இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், ஒரு மனித நேய சல்யூட்!

Related Posts