வாழ்க்கையில் ‘டேக் ஆஃப்’ ஆன ஜனனி: விமானி சாய் ரோஷனை மணந்தார்!

வாழ்க்கையில் ‘டேக் ஆஃப்’ ஆன ஜனனி: விமானி சாய் ரோஷனை மணந்தார்!

‘அவன் இவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, ‘தெகிடி’, ‘பலூன்’ உள்ளிட்ட படங்களில் தனது முத்திரை பதித்த நடிகை ஜனனி, இன்று இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளார். தனது நீண்ட கால காதலரான சாய் ரோஷன் ஷாமை அவர் மணமுடித்தார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த சாய் ரோஷன், தற்போது துபாயில் விமானியாகப் பணியாற்றி வருகிறார். இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டே முடிந்த நிலையில், இவர்களின் திருமணம் எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

அந்த நன்னாள் இன்று கைகூடியது. மகாபலிபுரம் அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில், குடும்பத்தினர் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. எளிமையாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் நடந்த இந்த திருமண விழாவில், இரு வீட்டாரும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள இந்த இணையருக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts