மனிதநேயரின் மகத்துவம்; மதுரையின் மகுடம்! ஐ.ஏ.எஸ்-ஸில் 2-ம் இடம் பிடித்த ராஜேஸ்வரி!

மனிதநேயரின் மகத்துவம்; மதுரையின் மகுடம்! ஐ.ஏ.எஸ்-ஸில் 2-ம் இடம் பிடித்த ராஜேஸ்வரி!

த்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியாகி, தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளன. இதில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி கவி, அகில இந்திய அளவில் 2-வது இடத்தைப் பிடித்து அதிரடி காட்டியுள்ளார்.

துணை கலெக்டர் டூ ஐ.ஏ.எஸ்!

ராஜேஸ்வரி கவி ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, திண்டுக்கல் மாவட்டத்தில் துணை கலெக்டராகப் பணியாற்றி வருகிறார். அரசுப் பணியில் பிஸியாக இருந்துகொண்டே, விடாமுயற்சியுடன் படித்து இன்று ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்கியுள்ளார். இவரைப் போலவே கோவையைச் சேர்ந்த ஸ்ருதி 18-வது இடத்தையும், திருச்சியைச் சேர்ந்த ரேஷ்மா 181-வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர்.

மனிதநேயம் பயிற்சி மையத்தின் மெகா வெற்றி!

சைதை துரைசாமியின் ‘மனிதநேயம் அறக்கட்டளை’ இந்த ஆண்டும் தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துள்ளது. இந்த மையத்தில் பயிற்சி பெற்ற 40 பேர் (26 ஆண்கள், 14 பெண்கள்) இம்முறை தேர்ச்சி பெற்றுள்ளனர்.சைதை துரைசாமி பகிர்ந்த சுவாரசிய தகவல்கள்:

  • நேர்முகத் தேர்வுக்குச் சென்ற 132 மாணவர்களுக்கும் டெல்லி செல்ல விமான டிக்கெட், தங்குமிடம் என அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது.

  • நேர்முகத் தேர்வின்போது மாணவர்கள் மிடுக்காகத் தோற்றமளிக்க கோட்-சூட், காலணிகள் மற்றும் பெண்களுக்குப் புடவைகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அறக்கட்டளை செய்திருந்தது.

  • கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் இந்த மையத்தின் மூலம் 4,420-க்கும் மேற்பட்டோர் அரசு அதிகாரிகளாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

 (படம்: அகில இந்திய அளவில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்த ராஜேஸ்வரி கவி, மனிதநேய அறக்கட்டளைத் தலைவர் சைதை துரைசாமியிடம் வாழ்த்துப் பெற்ற நெகிழ்ச்சியான தருணம்.)

Related Posts