‘காதல் ரீசெட் ரிப்பீட்’: மார்ச் 6 முதல்.. ஹாரிஸ் மேஜிக்… விஜய் கிளாசிக்!

‘காதல் ரீசெட் ரிப்பீட்’: மார்ச் 6 முதல்.. ஹாரிஸ் மேஜிக்… விஜய் கிளாசிக்!

மார்ச் 6-ம் தேதி தியேட்டர்களை ஆக்கிரமிக்க வருகிறது ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஒரு நல்ல மனசு கொண்ட சாதாரண மனுஷனோட கதையை, ஹாரிஸ் ஜெயராஜின் மேஜிக்கல் மியூசிக்கோடு சொல்ல வர்றார் விஜய். இந்த விழாவில் டீம் ஷேர் செய்த சுவாரஸ்யமான விஷயங்கள்:

“வில்லனாகவும் இருக்கலாம்” – அர்ஜுன் அசோகன்

இது என்னோட முதல் தமிழ் படம். ரொமான்ஸ், காமெடினு கலக்கற அதே நேரத்துல என் கேரக்டர்ல ஒரு சின்ன வில்லத்தனமும் இருக்கும். ஹாரிஸ் சார் மியூசிக்ல வர்ற பாட்டுக்கு முதல் முறையா நான் லிப்-சின்க் பண்ணியிருக்கேன், இது எனக்கு பெரிய ஆசிர்வாதம்!

“வீடு கட்ட காசு கொடுத்த விஜய்” – எம். எஸ். பாஸ்கர்

விஜய் தம்பி எப்பவும் எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுப்பார். நான் வீடு கட்டிட்டு இருந்தப்போ, அக்ரிமெண்ட் போடுறதுக்கு முன்னாடியே சம்பளத்தை கொடுத்து உதவி செஞ்சார். இந்த படம் நடிச்சப்போதான் நான் ‘தாத்தா’ ஆனேன், அதனால இது என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம்.

“குட்டியான கேமியோ” – விஜி சந்திரசேகர்

விஜய் கூப்பிட்ட உடனே கதை கூட கேட்காம ஓகே சொல்லிட்டேன். ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ – டைட்டிலே ரொம்ப ட்ரெண்டியா இருக்கு. இதுல ஒரு சின்ன ரோல் பண்ணியிருக்கேன்.

“8 மணி நேரம் செதுக்கிய ஹாரிஸ்” – மதன் கார்க்கி

ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பாட்டுக்காக எடுக்குற உழைப்பு அபாரமானது. ‘உன் பார்வை’ பாட்டுல பாடகர் வினீத் பாடும்போது, ஒவ்வொரு வரியையும் ரசிச்சு ரசிச்சு 8 மணி நேரம் செதுக்கினார். ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி இல்லாம, அம்மா சமைச்ச சாப்பாடு மாதிரி ஆரோக்கியமான மியூசிக் இது!

“வாழ்க்கையின் இரண்டாவது வழிகாட்டி” – ஜியா சங்கர்

எனக்கு ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தப்போ விஜய் சார் என் மேல நம்பிக்கை வச்சார். என் அம்மாவுக்கு அப்புறம் என் வாழ்க்கையோட பெரிய வழிகாட்டி அவர்தான். இது ஒரு கனவு நனவான தருணம்.

“நான் ஹாரிஸ் சாரோட தீவிர ரசிகன்” – மதும்கேஷ்

இந்த படத்துக்காக 100% உழைப்பைக் கொடுத்திருக்கேன். ஹாரிஸ் சாரோட பாட்டு கேட்டு வளர்ந்த பையன் நான், இப்போ அவரோட மியூசிக்ல நடிச்சிருக்கேன்னு நினைக்கும்போதே பெருமையா இருக்கு. இது ஒரு பக்கா எமோஷனல் டிராமா.

“கதைதான் உண்மையான ஹீரோ” – ஹாரிஸ் ஜெயராஜ்

‘மின்னலே’ பண்ணும்போது எல்லாரும் புதுசுதான், ஆனா கதை நல்லா இருந்ததால ஜெயிச்சது. அதே மாதிரி இந்த படமும் கதையை நம்பி எடுத்திருக்கோம். 25 வருஷத்துல 65 புது பாடகர்களை அறிமுகப்படுத்தியிருக்கேன். விஜய் இந்த கதையை இசையை மனசுல வச்சுதான் எழுதியிருக்கார்.

“விஜய் எனக்கு தாயுமானவன்” – இயக்குநர் பாலா

விஜய் எனக்கு ஜூனியரா இருந்தாலும், எப்படி ஹார்ட் வொர்க் பண்ணணும்னு சொல்லிக்கொடுத்த குரு அவர்தான். என் நல்லது கெட்டது எல்லாத்துலயும் முன்னாடி நிக்கிறவன். அவன் எனக்கு தாயும் தகப்பனுமா இருக்கான்.

“எமி ஜாக்சனை பார்த்த மாதிரி இருந்தது” – இயக்குநர் விஜய்

ஜியா சங்கரை முதல் தடவை கேமரா முன்னாடி பார்த்தப்போ, ‘மதராசபட்டினம்’ எமி ஜாக்சனை பார்த்த மாதிரியே இருந்தது. அவங்க இந்திய அளவுல பெரிய இடத்துக்கு வருவாங்க. இது ஒரு சாதாரண மனுஷனோட கதை. அழகு முக்கியமில்ல, அன்புதான் முக்கியம்னு சொல்ற படம்தான் இது.

“இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கு” – தயாரிப்பாளர் பிரேம்குமார்

விஜய் மேல இருந்த நம்பிக்கையிலதான் கதையே கேட்காம சைன் பண்ணேன். படத்தோட சில காட்சிகளை பார்த்த மீனவர் ஒருத்தர் ‘இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருக்கு’னு சொன்னார். சமுதாயத்துக்கு நல்ல படைப்புகளை கொடுக்கணும்கிறதுதான் எங்க நோக்கம்.


மார்ச் 6-ம் தேதி தியேட்டர்களில் சந்திக்கலாம்!

Related Posts