ஜியோஹாட்ஸ்டார் இன்ஸ்டாவை ஹேக் பண்ணது ஒரு நாய்க்குட்டியா? அட ஆமாங்க!

ஜியோஹாட்ஸ்டார் இன்ஸ்டாவை ஹேக் பண்ணது ஒரு நாய்க்குட்டியா? அட ஆமாங்க!

என்னப்பா இது… ஒரு வாரமா ஜியோஹாட்ஸ்டார் தமிழ் இன்ஸ்டா பக்கம் முழுசும் நாய்க்குட்டி கால் தடம் இருக்கு, ஏதோ ஹேக் ஆயிடுச்சோன்னு ரசிகர்கள் எல்லாம் பதறிப் போயிருந்தாங்க. ஆனா, இது நிஜமான ஹேக்கிங் கிடையாது, நம்ம ‘லக்கி’ நாய்க்குட்டியோட செம மார்க்கெட்டிங் பிளான்!

மேட்டர் என்னன்னா:

  • குற்றவாளி யாரு?: நாலு கால் சூப்பர் ஸ்டார் ‘லக்கி’ தான் இந்த இன்ஸ்டா பக்கத்தையே ‘டேக் ஓவர்’ பண்ணியிருக்கு. “நான் ஒன்னும் சிஸ்டத்தை ஹேக் பண்ணல, கீபோர்டு மேல சும்மா நடந்து போனேன், அது வைரல் ஆயிடுச்சு”ன்னு அந்த நாய்க்குட்டியே ஒரு வீடியோல சொல்லுதுனா பாருங்களேன்!

  • படம் ரிலீஸ்: ஜி.வி. பிரகாஷ் குமார் – அனஸ்வரா ராஜன் நடிச்ச ‘லக்கி’ படம் நாளைக்கு (பிப்ரவரி 20) ஜியோஹாட்ஸ்டார்ல ரிலீஸ் ஆகுது. அதுக்கான ஒரு அதிரடி புரமோஷன் தான் இது.

  • ஸ்பெஷல் வாய்ஸ்: இந்த படத்துல வர்ற விலங்குகளுக்கு கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையான்னு பெரிய பட்டாளமே வாய்ஸ் கொடுத்திருக்காங்க.

இன்ஸ்டாகிராம்ல பண்ண அலப்பறைய விட படத்துல ஜி.வி. பிரகாஷை இந்த லக்கி இன்னும் அதிகமா அலற விடப்போகுதாம். சோ, நாளைக்கு ஜியோஹாட்ஸ்டார்ல லக்கியோட லூட்டிய பாக்க ரெடியா இருங்க!

Related Posts