பாக்ஸ் ஆபீஸில் ‘நாகபந்தம்’ தாண்டவம்! மகேஷ் பாபு வெளியிட்ட அதிரடி டீசர் – மிரளவைக்கும் பிரம்மாண்டம்!

பாக்ஸ் ஆபீஸில் ‘நாகபந்தம்’ தாண்டவம்! மகேஷ் பாபு வெளியிட்ட அதிரடி டீசர் – மிரளவைக்கும் பிரம்மாண்டம்!

தெலுங்குத் திரையுலகின் ‘பிரின்ஸ்’ மகேஷ் பாபு, மகா சிவராத்திரி நன்னாளில் ஒரு மாபெரும் காவியத்தின் கதவைத் திறந்து வைத்திருக்கிறார். கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரிப்பில், அபிஷேக் நாமா இயக்கத்தில், விராட் கர்ணா நடிப்பில் உருவாகியுள்ள ‘நாகபந்தம்’ (Nagabandham) படத்தின் டீசர் தற்போது இணையத்தைக் கதறவிட்டு வருகிறது!

என்ன இருக்கிறது இந்த டீசரில்?

பனி படர்ந்த இமயமலையின் மர்ம முடிச்சுகள்… காலத்தால் அழியாத ரகசியங்கள்… பேராசை கொண்ட மனிதர்களுக்கும், விதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வீரன் – இவர்களுக்கு இடையேயான அண்டசராசரப் போர் தான் இந்த ‘நாகபந்தம்’.

  • புராணமும் வரலாறும்: அப்தாலியின் ஆப்கானிய படையெடுப்பின் பின்னணியில், ஆன்மீகத்தையும் போர்க்கலையையும் இணைத்து ஒரு விஷுவல் ட்ரீட்டை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அபிஷேக் நாமா.

  • வசனம் இல்லாத வசீகரம்: ஒரு வரி வசனம் கூட இல்லாமல், கேமராவின் கோணங்களாலும் பின்னணி இசையாலும் மட்டுமே பார்வையாளர்களை சீட் நுனிக்கே வரவழைக்கிறது இந்த டீசர்.

  • மிரட்டும் மேக்கிங்: சௌந்தர்ராஜனின் ஒளிப்பதிவும், ஜுனைத் குமாரின் அதிரடி பின்னணி இசையும் இந்திய சினிமாவின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன.

“படைப்பில் பிரம்மா… தர்மத்தில் விஷ்ணு… கோபத்தில் மகாதேவ்!” – இந்த ஒற்றை வரி படத்தின் ஆன்மாவை அப்பட்டமாகச் சொல்கிறது.


விராட் கர்ணாவின் விஸ்வரூபம்!

நாயகன் விராட் கர்ணா, ஒரு தேர்ந்த போர் வீரனாக ரத்தமும் சதையுமாகத் தெரிகிறார். குறிப்பாக, அந்த முதலையுடனான சண்டைக் காட்சியும், இறுதியில் அவர் சிவ அவதாரமாகத் தோன்றும் காட்சியும் தியேட்டரில் விசில் சத்தத்தைப் பறக்கவிடுவது உறுதி! இவருடன் நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு என ஒரு நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியுள்ளது.

ஹைதராபாத் பிரசாத் PCX திரையரங்கில் இந்த டீசர் திரையிடப்பட்டபோது, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டியது, இந்தப் படம் ஒரு ‘பான் இந்தியா’ பிளாக்பஸ்டர் என்பதை இப்போதே உறுதி செய்துவிட்டது.

 

Related Posts