பிரேக்கப் வலியை போக்க வரும் “பூக்கி”!: விஜய் ஆண்டனி மியூசிக்கில் அதிரடி ரோம்-காம்!
“பூக்கி” படத்தின் ஒவ்வொரு கலைஞரும் தங்களது உழைப்பையும், விஜய் ஆண்டனி மீதான அன்பையும் மேடையில் கொட்டினார்கள். இதோ அவர்கள் பேசியவற்றின் விரிவான தொகுப்பு:
தயாரிப்பாளர் & இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி
“இந்த வெற்றிக்குக் காரணமான பத்திரிக்கை நண்பர்களாகிய நீங்கள் இல்லாமல் நான் இல்லை. இந்த விழாவின் உண்மையான நாயகன் கணேஷ் சந்திரா தான். அவரை நான் ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் அறிமுகப்படுத்தினேன், ஆனால் இன்று ஒரு சிறந்த இயக்குநராக உயர்ந்து நிற்கிறார். இந்தப் படம் இளைஞர்களுக்குப் பிடிக்கும் விதமாக மிகச் சிறப்பாக வந்துள்ளது.”
இயக்குநர் சசி
“விஜய் ஆண்டனி மற்றும் அஜயை வைத்து நான் ஒரு படம் இயக்கி வருகிறேன். அதில் அவர்கள் கிராமத்து வேடத்தில் ‘டேன் லுக்’கில் இருப்பார்கள். ஆனால், இங்கே பூக்கி படத்தில் பார்த்தால் எல்லாமே செம கலர்ஃபுல்லாகவும்,
ஃப்ரெஷ்ஷாகவும் இருக்கிறது. இது எனக்குப் பெரிய சர்ப்ரைஸ்! அஜய் ஒரு மிகச்சிறந்த திறமைசாலி, இரண்டு படங்களிலும் வித்யாசம் காட்டியுள்ளார். கணேஷ் சந்திராவின் மேக்கிங் எப்போதும் ஒரு உணர்வோடு இருக்கும். குறிப்பாக விஜய் ஆண்டனியின் இசை, சோகமான பாடலையும் ஒரு தனி வைப் (Vibe) உடன் கொடுத்திருக்கிறார். பிப்ரவரி 13 ஒரு நல்ல படம் திரைக்கு வருவது உறுதி!”
நடிகர் அஷ்வின் ராம்
“ஏழு வருட தியேட்டர் குரூப் அனுபவத்திற்குப் பிறகு, இந்த பூக்கி வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கணேஷ் சார் ஒரே நேரத்தில் கேமரா மற்றும் டைரக்ஷன் இரண்டையும் கையாண்ட விதம் மிரட்டல். விஜய் ஆண்டனி சாருடைய பாடல்களுக்கு நான் தீவிர ரசிகன். அவர் தயாரிக்கும் படத்திலேயே நடித்திருப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி.”
காஸ்ட்யூம் டிசைனர் மாளவிகா
“பூக்கி என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். இந்த டீமில் வேலை பார்த்தது ஒரு அழகான அனுபவம். காதலர்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறைக்கும் இந்தப் படம் மிகவும் பிடிக்கும். பிப்ரவரி 13 அன்று திரையரங்குகளில் இதைப் பார்க்கத் தவறாதீர்கள்.”
நடன இயக்குநர் ஹரி
“இயக்குநரும், விஜய் ஆண்டனி சாரும் கொடுத்த சுதந்திரம் தான் இந்தப் படத்தின் பாடல்கள் சிறப்பாக வரக் காரணம். ஒரு சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளேன். அனைவரும் திரையரங்கில் பாருங்கள்.”

கலை இயக்குநர் பிரகதீஸ்வரன்
“இயக்குநர் கணேஷ் இந்தப் படத்தைப் பற்றிக் கூறும்போது, ‘இது ஒரு ஃபேண்டஸி (Fantasy) போலவும், இதுவரை பார்த்ததிலிருந்து வேறு மாதிரியாகவும் இருக்க வேண்டும்’ என்று சொன்னார். ஒவ்வொரு காட்சியையும் விவாதித்துச் செதுக்கினோம். அந்த உழைப்பு திரையில் தெரியும். உங்கள் கருத்துக்காகக் காத்திருக்கிறோம்.”
பாடலாசிரியர் லாவர்தன்
“நான் 12-ம் வகுப்பு படிக்கும்போது ‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜய் ஆண்டனி சாரோட ‘புலி உருமுது’ பாட்டுக்கு வைப் பண்ணியவன். இன்னைக்கு அவர் பக்கத்துல உட்கார்ந்து, அவர் மியூசிக்ல பாட்டு எழுதுறதை ஒரு வரமாக நினைக்கிறேன். பல பாடலாசிரியர்களின் கனவை நான் இன்று நனவாக்கியிருக்கிறேன். வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் எழுத்தாளர் புதிய பரிதி சாருக்கு நன்றி.”
ஸ்டண்ட் மாஸ்டர் பிரபு ஜாக்கி
“கணேஷ் சந்திராவுடன் அவர் ஒளிப்பதிவாளராக இருந்த காலத்திலிருந்தே நான் பணியாற்றி வருகிறேன். அந்த நட்பில் இந்த வாய்ப்புக் கிடைத்தது. படத்தில் ஒரு அதிரடியான சேஸிங் சீன் மற்றும் ஃபைட் சீன் இருக்கிறது. ஆக்ஷன் ரசிகர்களுக்கும் இந்தப் படத்தில் நல்ல விருந்து உண்டு.”

நடிகை பிரியங்கா மஸ்தானி
“நான் சேலத்தைச் சேர்ந்த கிராமத்துப் பொண்ணு. என்னைப் போன்றவர்களுக்கு விஜய் ஆண்டனி சார் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் வாய்ப்புத் தருவது மிகப்பெரிய விஷயம். இயக்குநர் மிகவும் கூல்! ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் கோபப்படவே மாட்டார். ஜாலியாக வேலை பார்த்தோம். அனைவருக்கும் நன்றி.”
குழந்தை நட்சத்திரம் ஷன்விகா ஶ்ரீ
“எனக்கு அஞ்சு வயசு தான் ஆகுது. இந்தப் படத்துல நடிச்சது எனக்கு ரொம்ப ஜாலியா இருந்துச்சு. எல்லாருக்கும் இந்தப் படம் பிடிக்கும், கண்டிப்பா பாருங்க!”

நடிகர் சத்யா
“எனக்கு பிக்பாஸ் கொடுத்த அங்கீகாரத்தை விட, ‘பூக்கி’ திரைப்படம் ஒரு பெரிய அடையாளத்தைத் தரும் என நம்புகிறேன். ஹீரோ அஜய் ஒரு கற்பூரம் மாதிரி, எந்த சீன் கொடுத்தாலும் அசத்தலாக நடிப்பார். ஹீரோயின் தனுஷாவும் அருமையாக நடித்துள்ளார். 13-ம் தேதி கொண்டாட்டத்துக்குத் தயாராகுங்கள்.”


