மீண்டும் ‘மின்னலே’: மேஜிக் செய்ய வரும் மேடி!
அப்போதெல்லாம் காதலர் தினம் என்றாலே தியேட்டர்களில் ஹார்ட்-பீட் எகிற வைக்கும் ஒரே படம் ‘மின்னலே’ தான். இப்போது 25 ஆண்டுகள் கழித்து, அதே வைபோடு மீண்டும் நம்மை காதலில் நனைக்கத் தயாராகிவிட்டது இந்த கிளாசிக் ஹிட்! சி டிவி என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் முரளி மனோகர் தயாரிப்பில், ‘ஸ்டைலிஷ்’ இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிமுகமான அதே அதிரடித் தொடக்கம், இப்போது டிஜிட்டல் மெருகூட்டலுடன் மீண்டும் வருகிறது.
‘அலைபாயுதே’ சாக்லேட் பாயாக இருந்த மாதவனை ஒட்டுமொத்த இளைஞர்களின் ஐகானாக மாற்றிய இந்தப் படத்தில், ரீமா சென், அப்பாஸ் மற்றும் காமெடியில் கலக்கிய விவேக் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே உண்டு. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இன்றும் நம் ‘ப்ளே-லிஸ்ட்டை’ ஆளும் அந்த மாயாஜாலப் பாடல்களை மீண்டும் பெரிய திரையில் கேட்கப் போகிறோம் என்பதே செம எக்ஸைட்மென்ட்!
தற்போது பழைய பிளாக்பஸ்டர் படங்களை மீண்டும் திரையிடும் டிரெண்ட் செம ஹிட்டாகி வரும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் ஆகிறது ‘மின்னலே’. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் வெளியிடும் இந்தப் படம், 2001-இல் கொடுத்த அதே சிலிர்ப்பை 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் தரப்போகிறது. தியேட்டரில் மின்னல் வெட்டப் போவது உறுதி!

