ZEE5ல் ‘பராசக்தி’ 4 மொழிகளில்! 9ம் தேதிக்குள்ள பார்த்துருங்க!

ZEE5ல் ‘பராசக்தி’ 4 மொழிகளில்! 9ம் தேதிக்குள்ள பார்த்துருங்க!

திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற பராசக்தி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் விவகாரம், இப்போது உச்சகட்டப் பரபரப்பை எட்டியிருக்கிறது!

சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் உருவான இந்தப் படம், நாளை  zee5 ஓடிடி  தளத்தில் வெளியாக இருந்தது. இந்த நிலையில், கடைசி நிமிடத்தில் விழுந்த ‘கதை திருட்டு’ புகார் ரசிகர்களை அதிர வைத்தது.  உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர்,  “இது என் செம்மொழி கதை” என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனால்  படம் ஓ.டி.டி.யில் வெளியாவது தடைபடுமா என்ற பதைபதைப்பு நிலவியது.ஆனால், தயாரிப்பு தரப்பு  “1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது ஒரு மாநிலத்தின் வரலாறு; அந்த வரலாற்றைத் தனக்கே சொந்தம் என யாரும் காப்புரிமை கொண்டாட முடியாது” என வாதத்தை முன்வைத்தது. இருதரப்பும்  நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கி நகம் கடித்துக் காத்திருந்தது.

இறுதியாக, இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, படம் ஓடிடியில் வெளியாக  இடைக்காலத் தடை விதிக்க  மறுத்துவிட்டார்.

இதன் மூலம் நாளை பிப்ரவரி 7-ம் தேதி படம் ரிலீஸாவது உறுதியாகிவிட்டது. ஆனாலும் ஆபத்து இன்னும் விலகவில்லை; வழக்கின் விசாரணை பிப்ரவரி 9-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்று வரப்போகும் இறுதித் தீர்ப்பு படத்திற்குச் சாதகமாக இல்லையென்றால், ஓடிடி-யில் இருந்து படம் நீக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே, ‘பராசக்தி’யை பார்க்கத் துடிப்பவர்கள், 9-ம் தேதிக்குள் பார்த்துவிடுங்கள்.

Related Posts