ஆர்டர் கம்ப்ளீட்: ‘டெலிவரி பாய்’ படப்பிடிப்பு நிறைவு!
அசசி கிரியேஷன்ஸ் சார்பில் அமுதா லியோனி இப்படத்தைத் தயாரிக்க, பிரபல இயக்குனர் சுசீந்திரனின் உதவி இயக்குனரான நானி இயக்க்தில் உருவாகும் திரைப்படம் “டெலிவரி பாய்”.
பட்டிமன்ற பேச்சாளர் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் மற்றும் பிரிகடா மேலும் ராதிகா சரத்குமார், காளி வெங்கட், துஷ்யந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.
சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைக்க, பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
உணவு விநியோகம் செய்யும் இளைஞர்களின் வாழ்வியலையும், அவர்கள் சந்திக்கும் சவால்களையும் மையமாகக் கொண்ட எமோஷனல் ஆக்க்ஷன் டிராமாவாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரை நடிகர் சூரி மற்றும் இயக்குனர் சுசீந்திரன் ஆகியோர் சமீபத்தில் வெளியிட்டனர்.
படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து. இப்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்தது.
