பா.ரஞ்சித் இணைந்து தயாரித்த படம் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வு!
இயக்குநர் பா. இரஞ்சித் இணைத் தயாரிப்பில், டாக்டர் பிஜுகுமார் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Papa Buka’ திரைப்படம், முதன்முதலாக பப்புவா நியூ கினியா நாட்டின் சார்பில் 98வது ஆஸ்கர் விருதுகளுக்கான பட்டியலில் அதிகாரப்பூர்வ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் பாப்புவா நியூ கினியா நாட்டின் சார்பாக முதல் முறையாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது திரைப்படம்.
இப்படத்தை ‘Trees Under the Sun’ எனும் படத்தை இயக்கி சர்வதேச அளவில் விருதுகளை வென்று கவனம் ஈர்த்த மலையாள இயக்குநர் பிஜு குமார் தாமோதரன் இயக்கியிருக்கிறார். பப்புவா நியூ கினியா நாட்டின் திரைப்படமான இதை அக்ஷய் குமார் பரிஜா, பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கின்றனர். கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ் இசையமைத்திருக்கிறார்.
இந்தியாவைச் சேர்ந்த இரண்டு வரலாற்று ஆய்வாளர்கள், இரண்டாம் உலகப்போரில் போரில் ஈடுபட்ட முதியவரின் உதவியுடன் பப்புவா நியூ கினியா நாட்டிற்கும், இந்தியாவிற்கும் இடையே இருக்கும் வரலாற்று தொடர்பையும், அந்நாட்டில் ஏற்பட்ட இரண்டாம் உலகப்போர் பாதிப்பையும் மனிதத்தோடு எடுத்துக் காட்டுவதுதான் இதன் கதைக்களம்.
பப்புவா நியூ கினியாவின் 50வது சுதந்திர ஆண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் நீலம் புரொடக்சன்ஸ் பங்கு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

