“‘கேப்டன பிரபாகரன்’: பச்சைப் பொய் சொன்ன ஆர்.கே.செல்வமணி!”: செய்தியாளர் சிவசுப்ரமணியன்!

“‘கேப்டன பிரபாகரன்’: பச்சைப் பொய் சொன்ன ஆர்.கே.செல்வமணி!”: செய்தியாளர் சிவசுப்ரமணியன்!

தமிழ்த் திரையுலக வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்படங்களில் ஒன்று, ‘கேப்டன் பிரபாகரன்’.

1991 ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரை ஒன்று அன்று வெளியான இப்படம், வெளியாவதற்கு முன்பே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

விஜயகாந்தின் நூறாவது திரைப்படம், ஏற்கெனவே அவரது நடிப்பில் வெளியான வெற்றித் திரைப்படமான ‘புலன் விசாரணை’ படத்தை இயக்கிய ஆர்கே செல்வமணியே மீண்டும் இப்படத்தில் இணைந்தது.. ஆகியவை திரைக் காரணங்கள்.

அதை மீறிய வேறு இரு காரணங்கள் இருந்தன..

முதல் காரணம்… ஈழ விடுதலைக்காகப் போராடி வந்த பிரபாகரன் பெயரை தலைப்பாக கொண்ட முதல் திரைப்படம்!

இரண்டாவது காரணம்.. “நூறு கோடி ரூபாய்க்கும் மேலுள்ள சந்தனக் கட்டைகளை கொள்ளையடித்தவர்… காவலர்கள் உட்பட நூறு பேருக்கும் மேலானவர்களை கொன்றவர்” என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்ட, சந்தன வீரப்பன் குறித்த முதல் திரைப்படம்.

தவிர, அப்போது வீரப்பனின் ஒளிப்படம்கூட யாரிடமும் இல்லை. அதாவது வீரப்பனின் முகமே யாருக்கும் தெரியாது.

ஆகவே 34 வருடங்கள் கழித்து மறுபடி இ்படம் ரீ ரிலீஸ் ஆனபோதும் வரவேற்பு கிடைத்தது.

ஆனால் ஆர்.கே.செல்வமணி சொன்ன தகவல் ஒன்று சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

அவர், “இந்தப் படத்தை உருவாக்கும் முன், வீரப்பனை சந்தித்தேன்” என்று சமீபத்தில் கூறி இருந்தார்.

அப்போது அவர், “கோவை சேர்ந்த பள்ளிக்கூட ஆசிரியர் ஜான் அமிர்தராஜ்.. என் படத்தில் உதவி உதவி இயக்குநராக இருந்தார்.  அவர் மூலம் வீரப்பனை சந்திக்கத் திட்டமிட்டேன். அதன்படி, 1990  பிப்ரவரி.. மார்ச் மாதத்தில், தாளவாடி காட்டில் வீரப்பனை சந்தித்தேன்” என்றார்.

ஆனால், வீரப்பனை முதன் முதல் சந்தித்து அவரது பேட்டி, வீடியோ, படங்களை வெளியிட்ட செய்தியாளர் சிவசுப்ரமணியன் இதை மறுத்துள்ளார். அவர், “ஆர்.கே. செல்வமணி குறிப்பிட்ட காலத்தில் தாளவாடி பகுதியில் வீரப்பன் இல்லை. அங்கிருந்து இருநூற்றி ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில உள்ள மெட்டுக்கல் பகுதியில் இருந்தார்.  தவிர அப்போதுதான் வீரப்பனுக்கு திருமணம் ஆகி இருந்தது. காட்டில் மனைவியுடன் இருந்தார். நான் வீரப்பன் மனைவயிடமும் பேசினேன்.  அவரும் ஆர்.கே.செல்வமணி கூறுவதை மறுத்தார்.

தவிர, நான் வீரப்பனை சந்தித்தபோது, அதற்கு முன்பே வெளிவந்த கேப்டன் பிரபாகரன் படம் குறித்தும் பேசினேன். அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

கேப்டன் பிரபாகரன் படத்துக்காக வன அதிகாரி ஒருவரைத்தான் ஆர்.கே.செல்வமணி சந்தித்துப் பேசினார்” என்று  தெரிவித்து உள்ளார்.

மேலும் பல விபரங்களுடன், தனது சிவா வீடியோஸ் யு டியுப் சேனலில்  வீடியோவும் வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோ…

 

 

 

 

Related Posts