சசிகுமாரை போட்டுத் தாக்கிய இயக்குநர் வேலு பிரபாகரன்!

சசிகுமாரை போட்டுத் தாக்கிய இயக்குநர் வேலு பிரபாகரன்!
 கவனத்தை ஈர்க்கும் திரைப்படங்களை அளித்து வந்த சசிகுமார், இடையில் கடன் பிரச்சினை காரணமாக மசாலா படங்களில் நடித்து வந்தார்.  தற்போது கடன் பிரச்சினை தீர்ந்த நிலையில், அயோத்தி, நந்தன், டூரிஸ்ட் பேமிலி என சிறந்த படங்களில் நடிக்க ஆரம்பித்து உள்ளார்.  அடுத்தடுத்து சத்யசிவா, ராஜூ முருகன் ஆகியோர் இயக்கத்தில் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.  சுவாமிக்கு பால் அபிஷேகம், அம்பாளுக்கு பட்டுப் புடவை வைத்து அபிசேகம் செய்யப்பட,  சசிகுமார் மனமுருகி வேண்டிக்கொண்டார். பின்னர் நடராஜர் சன்னதி மற்றும் இதன் பின்புறம் உள்ள பதஞ்சலி முனிவர் சமாதி முன் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார்.

அங்கு கூடியிருந்த மக்கள், சசிகுமாருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் புரட்சிகர திரைப்படங்களை இயக்கி வரும் பிரபல  இயக்குநர் வேலு பிரபாகரன், தனது முகநூல் பதிவில் இது குறித்து பதிவு வெளியிட்டு உள்ளார்.

அதில், “இவரு சமீபத்தில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கம்யூனிசத்தை பத்தி பேசினார்.. பாவம் இவங்க எல்லாம் பல்லாயிரம் கோடி சம்பாதிக்கணும் அதுதான் இலக்கு.. ஒரு படம் வெற்றி அடைந்த உடனே அதுக்கு காணிக்கையாக கடவுளுக்கு நன்றி சொல்ல போறவங்க.. போதாக்குறைக்கு அப்பப்ப பெரியாரையும் பேசுவாங்க… இவனுங்க குழம்புறது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனால் மத்தவங்கள குழப்புவது தான் நமக்கு கவலை” என்று காட்டமாக குறிப்பிட்டு உள்ளார்.மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சசிகுமார், “ராஜுமுருகன் படத்தில் நான் நடித்துக்கொண்டிருக்கிறேன். அவருடைய ஒவ்வொரு எழுத்துகளும், வார்த்தைகளும் கம்யூனிசம் பேசும். இந்த தைரியம் ஒவ்வொரு கம்யூனிஸ்ட்க்கும் இருக்கும்.

மனிதம் பேசும் இரண்டு படங்கள் என்னைக் கப்பாற்றியது.  ஒன்று அயோத்தி இன்னொன்று நந்தன். இந்தப் படத்தை பார்த்ததால்தான் என்னை இந்த நிகழ்வுக்கு அழைத்தேன் என்றார்கள். அப்போது நானும் அந்த இரண்டு படங்களில் கம்யூனிசம் பேசி இருக்கிறேன் என்று அர்த்தம்.
நந்தன் படத்தைப் பார்த்துவிட்டு தோழர் பாலகிருஷ்ணன் ஐயா சென்னை அலுவலகத்திற்கு என்னை அழைத்து பாராட்டிய விஷயத்தை என்னால் மறக்கவே முடியாது. அதுமட்டுமின்றி ‘சில இடங்களில் பஞ்சாயத்து தலைவர்களைக் கொடி ஏற்றவிடாமல் செய்கிறார்கள். அதற்கு எதிராக எங்களுடைய தோழர்கள் பல இடங்களில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ‘நந்தன்’ படத்தின் மூலம் இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறீர்கள். அது பெரும்பாலான மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. பல காலத்திற்கு அது நிலைத்து நிற்கும்’ என்று என்னிடம் சொன்னார்.
அந்தப் பாராட்டுதான் என்னை இந்த மேடை வரைக்கும் அழைத்து வந்திருக்கிறது. கம்யூனிசம் கலையை ஊக்குவிக்கிறது. சாதாரணமாக இருந்தாலே கம்யூனிஸ்ட் என்று சொன்னார்கள். அப்படி பார்த்தால் நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான் போல” என்று  சசிகுமார் கூறியிருந்தார்.
இதை மனதில் வைத்துத்தான் இயக்குநர் வேலு பிரபாகரன், பதிவிட்டு உள்ளார்.

Related Posts