இரா.பார்த்திபன் மகன் ராக்கி இயக்குநர் ஆகிறார்!
நடிகரும் இயக்குநருமான இரா.பார்த்திபனின் மகன், ராக்கி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்த இரா.பார்த்திபன் கடந்த 1989 ஆம் ஆண்டு இயக்கி நடித்த படம், புதிய பாதை. இதில் உடன் நடித்த சீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கீர்த்தனா, அபிநயா ஆகிய இரு மகள்களும் ராக்கி என்ற மகனும் உண்டு.
இந்நிலையில், இரா.பார்த்திபன் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளதாவது:
“ராக்கி பார்த்திபன் !
என் மகன்
என் உயிருக்கு நிகர்.
கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து
தெளிந்தத் திரை ஞானம்,திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார் .விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன்.
அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக
வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart ! அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்! ” என்று குறிப்பிட்டு உள்ளார்.
அவரது மகனையும் வாழ்த்தி வரவேற்போம்.

