ரெட்ரோ: அசத்திய சூர்யா!
படத்துக்குப் படம் வித்தியாசமான வேடங்களில் அசத்துவது சூர்யாவின் பாணி. தற்போது வெளியாகி உள்ள ரெட்ரோவும் விதிவிலக்கு அல்ல. ஊடகங்கள் அவரது நடிப்பை பாராட்டி உள்ளன. அவற்றில் சில…
@
படம் முழுக்க சூர்யாவின் ராஜ்ஜியம்தான். காதல் காட்சிகளில் தன்னை நிரூபிக்க பூஜாவிடம் உருகுவது, ஆக்ஷன் காட்சிகளில் வில்லன்களிடம் ஆக்ரோஷம் காட்டுவது என வெரைட்டி காட்டி ஈர்க்கிறார். கடந்த சில படங்களில் இருந்த மேனரிசங்களை எல்லாம் ஒதுக்கி மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார்.
@
சின்ன வயதிலிருந்தே சிரிப்பே வராத இருக்கமான முகத்துடன் தாதாவாக வலம் வரும் சூர்யாவின் நடிப்பு கச்சிதம். ஒவ்வொரு காட்சியிலும் தனது ஈடுபாட்டை முழுமையாக காட்டி நடித்துள்ளார். குறிப்பாக முதல் பாதையில் வரும் கல்யாண பாடலான ‘கனிமா’ பாடலுக்கு ஒரே சிங்கிள் ஷாட்டில் பாட்டு, டான்ஸ், பைட் என மாஸ் காட்டி சூர்யா நடித்திருக்கிறார். 10 நிமிடத்திற்கு மேல் ஓடும் இந்த காட்சியை தியேட்டரில் ரசிகர்கள் விசில் அடித்துக் கொண்டாடுகின்றனர். சூர்யாவின் நடனமும் ரசிக்க வைக்கிறது. காதலிக்காக திருந்தி வாழும் காட்சிகளிலும், ஜோஜு ஜார்ஜுடன் மோதல் காட்சிகளிலும் சூர்யாவின் நடிப்பு அபாரம். ஆக்ஷன் காட்சிகளில் முறுக்கேறிய உடம்புடன் எதிரிகளைப் பந்தாடும் காட்சிகளில் மிரட்டுகிறார். அவருடைய கேரியரில் பெஸ்ட் பைட் சீக்வென்ஸ் படமாக இது இருக்கும்
@
சூர்யா நவரச நடிப்பை கொடுத்து உள்ளார். தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்து உள்ளார்.
@
கோபத்தில் முள்ளாகக் குத்திக் கிழிக்கும் ரௌத்திர பாரியாக ஒரு புறம், காதலின் வலியை உணர்த்தும் சோகமான சாப்லினாக மறுபுறம் எனச் சூர்யா படத்தைத் தனது நடிப்பால் முழுவதுமாகத் தாங்கியிருக்கிறார்.
குறிப்பாக, சண்டைக் காட்சிகளில் அவரது முயற்சிகள் மிரட்டல்!
இப்படி பல ஊடகங்களும், சமூகவலைதளங்களில் பலரும் சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

