டெஸ்ட்:திரைப்பட விமர்சனம்
கேண்டீன் நடத்தும் சரவணன் – குமுதா தம்பதிக்கு பல ஆண்டுகளாக குழந்தைஇல்லை. அதற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் ஆராய்ச்சிக்காக பல லட்ச ரூபாய் கடன் வாங்கி அதனை அடைக்க முடியாமல் தவித்து வருகிறார், சரவணன்.
இன்னொரு பக்கம், குமுதாவின் சிறு வயது தோழன் அர்ஜூன். இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக இருந்து தற்போது பார்ம் அவுட் ஆகி, சோர்ந்து கிடக்கிறார்.
இந்த மூன்று பேரின் வாழ்க்கையும் ஒரு புள்ளியில் இணையும்போது என்ன நடந்தது என்பதே கதை.
படத்தில் ஈர்க்கும் முக்கிய விசயம்… நடிகர்கள்!
மாதவன். நயன்தாரா, சித்தார்த் மூன்று பேருமே அற்புதமான நடிப்பை அள்ளித்தந்து இருக்கின்றனர். தம்பதியாக வரும் மாதவன் – நயன் இருவரும் பரஸ்பரம் காட்டும் நேசம், ஃபார்ம் அவுட்ஆன கிரிக்கெட் வீரரவாக ஆதங்க வாழ்க்கை வாழும் சித்தார்த்… மூவருமே சிற்பபான நடிப்பு.
பாடகி சக்திஸ்ரீ கோபாலன், படத்துக்கு இசை அமைத்து இருக்கிறார். பின்னணி இசை சிறப்பு. அதே நேரம், பாடல்கள் அவ்வளவாக ரசிக்க வைக்கவில்லை.
விராஸ் சிங்கின் ஒளிப்பதி சிறப்பாக உள்ளது.
டி.எஸ்.சுரேஷின் படத்தொகுப்பு முதல் பாதியில் ஓகே. இரண்டாம் பாதியில் கொஞ்சம் வள வள.
கிரிக்கெட்டை மையமாக கொண்டு, நிறைய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தப் படமும் கிரிக்கெட்டை மையமாக் கொண்டே சுழல்கிறது. ஆனால், முழுமையான ஸ்போர்ட்ஸ் படம் அல்ல என்பது ஆறுதல். கிரிக்கெட் போட்டிகளின் பின்னணியில் நடக்கும் அரசியல், சூதாட்டம் போன்றவற்றை வெளிப்படுத்தும் வித்தியாசமான முயற்சி.
அதை சிறப்பாகவே செய்து இருக்கிறார், இயக்குநர் சசிகாந்த்.
படத்தின் ஆரம்ப காட்சிகளில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும்போதே நம்மை ஈர்த்துவிடுகிறார். முக்கிய கதாபாத்திரங்கள் யாரும், முழுமையாக நல்லவர்களோ, அல்லது முழுமையாக கெட்டவர்களோ அல்ல. தங்களது வழியில் சுயநல நோக்கம் கொண்ட எதார்த்த மனிதர்கள். இப்படிப்பட்ட பாத்திரப்படைப்புகாக இயக்குநருக்கு இன்னொரு பாராட்டு.
மாதவன் – நயன் இடையிலான உறவு, காதல், ஊடல் ஆகியவை ரசிக்க வைக்கின்றன. அதேபோல மாதவனின் கடன் பிரச்சினை குறித்த காட்சிகள், சித்தார்த்துக்கும் கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையிலான முரண்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் காட்சிகளும் ஈர்க்கின்றன.
மொத்தத்தில் பார்த்து ரசிக்கலாம்…!
நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வெளியான ‘டெஸ்ட்’ படத்தின் கதை.
