மதகஜராஜா : விமர்சனம்: லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா இருக்கா?
எந்தவித லாஜிக்கும் பார்க்காமல், ஜாலியா சிரித்துவிட்டு வரலாம் என்கிற சுந்திர் சி முத்திரை படம்.
மதகஜராஜா , கல்யாண சுந்தரம், ரமேஷ், சண்முகம் நால்வரும் சின்ன வயசு ப்ரண்ட்ஸ். தங்களது பள்ளிக்கால உடற்பயிற்சி ஆசிரியர் மகளின் திருமணத்துக்கு வருகிறார்கள். பல வருடங்களுக்குப் பிறகு நடக்கும் பாசச் சந்திப்பில் உருகுகிறார்கள்.
நண்பர்களில் கேப்டனான மதகதராஜா, பிற நண்பர்களுக்கு உள்ள பிரச்சினைகளை அறிகிறார். அதை தீர்க்க களம் இறங்குகையில், பெரும் செல்வாக்கு உள்ள கற்குவேல் விஸ்வநாத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
அதில் மதகதராஜா எப்படி வென்றார் என்பதே கதை.
நண்பர்களின் நாயகன் மதகதராஜாவாக விஷால்.
எதிரிகளை அடித்து துவம்சம்செய்யும் சிக்ஸ் பேக்ஸ் உடம்பு, வில்லனிடம் கெத்தாக விடும் சவால், டபுள் ஹீரோயின்களிடம் ரொமான்ஸ் என்று கலகல விஷால் ரசிக்க வைக்கிறார்.
அடுத்தவர் வசனங்களுக்கெல்லாம் கவுன்ட்டர் போட்டுச் சிரிக்க வைக்க முயல்கிறார் சந்தானம். சில சிரிக்க வைக்கின்றன… சில எரிச்சல் அடைய வைக்கின்றன.
அஞ்சலியும், வரலட்சுமியும் பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்து உள்ளனர்.
மனோபாலா,மணிவண்ணன், சிட்டி பாபு ஆகியோரையும் திரையில் பார்ப்பது நெகிழ்வை ஏற்படுத்துகிறது.
விஜய் ஆண்டனியின் இசையில் விஷாலின் குரலில் பல ஆண்டுகளுக்கு முன்பே ‘டியர் லவ்வரு’ பாடல் ஹிட் ஆனது. அதே போல ‘சிக்கு புக்கு ரயிலு வண்டி’ பாடலும் ரசிக்க வைத்தது. இவற்றை திரையில் பார்ப்பது கூடுதலாக ரசிக்க வைக்கிறது.
ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில் சண்டைக் காட்சிகளும், பாரின் பீச் பாடல்களும் பிரமிக்க.. ரசிக்க வைக்கின்றன.
பிரவீன் கே.எல் – என்.பி.ஸ்ரீ காந்த் கூட்டணியின் படத்தொகுப்பு கச்சிதம்.
லாஜிக்கெல்லாம் பார்க்காமல் சிரித்துவிட்டு வரலாம். இயக்குநர் சுந்தர் சிக்கு நன்றி.

