பயாஸ்கோப்: திரை விமர்சனம்
சங்ககிரி ராச்குார் படைப்பில் வெளிவந்திருக்கும் பயாஸ்கோப் திரைப்படம் பார்த்தேன்.
அவர் முன்பு இயக்கி வெளியிட்ட வெங்காயம் திரைப்படம் எடுத்து வெளியிட்ட அனுபவத்தை திரைக்கதையாக்கி நகைச்சுவை சென்டிமென்ட் கலவையாக்கி புதிய திரைப்படத்தை படைத்துள்ளார்.
இந்த திரைப்படம் தமிழுக்கு மட்டுமல்ல இந்திய ஏன் உலக சினிமாக்களுக்கே புதுசு
இந்த படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவருமே சங்ககிரி ராஜ்குமாரின் அப்பா தாத்தா பாட்டி ஊர்க்காரங்க குலுங்கி குலுங்கி சிரிப்பதற்கும் தேம்பி தேம்பி அழுவதற்கும் நிறைய காட்சிகள் படத்தில் உண்டு.
ஒரு காட்சியில் பாட்டி நடிக்கும் போது நடிப்பு வராது அப்போது இயக்குனர் செத்துப்போன சித்தப்பாவை நெனச்சி அழு என்பார் . அந்த பாட்டி ஓ என்று ஒப்பாரி வைத்து அழும் படக்காட்சி முடிந்த பிறகும் . இந்த காட்சியில் நானும் அழுதேன் . ச்ச என்ன சின்னபுள்ளத்தனமா அழறோம் பக்கத்தில் இருப்பவங்க என்ன நெனைப்பாங்க என்று நினைத்து பக்கத்தில் இருப்பவரை பார்க்கிறேன் அவரும் தேம்பி தேம்பி அழறார்
கைகுடுங்க ராஜ்குமார் பயாஸ்கோப் திரைப்பட கல்லூரியில் பாடமாக இருக்கும்!
நீங்களும் ஆஹா ஓ.டி.டி.யில் பாருங்கள்.. இந்த உண்மையான சினிமாவை!
– சித்தர் திருத்தணிகாசலம்
