மகாவிஷ்ணுவுக்கு எத்தனை வருசம் ஜெயில்?

மகாவிஷ்ணுவுக்கு எத்தனை வருசம் ஜெயில்?

சென்னை  அசோக் நகர் மற்றும் சைதை பகுதிகளில் உள்ள இரு அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை கருத்துக்களை மாணவர்களிடம் பேசியது, இதைச் சுட்டிக்காட்டிய மாற்றுத்திறனாளி ஆசிரியரை ஏளனம் செய்தது உள்ளிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அவரது பேச்சைக் கண்டித்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேலும், சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகர் காவல்நிலையங்களில் புகார் அளித்தனர்.

“மகாவிஸ்ணுவை கைது செய்ய வேண்டும்.. அவர் நடத்தும் பரம்பொருள் என்கிற அமைப்பை தடை செய்ய வேண்டும்” என்று மாற்றுத் திறனாளிகளுக்காக போராடும் டிசம்பர் 3 அமைப்பின் பேராசிரியர் தீபக் நாதன் தெரிவித்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டார். சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் அனிதா ஆனந்த் முன்பு நேர் நிறுத்தப்பட்ட அவரை, செப்டம்பர் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

டிசம்பர் 3 அமைப்பின் பேராசிரியர் தீபக் நாதனை தொடர்புகொண்டு பேசினேன்.

அவர், “மகாவிஸ்ணு என்கிற அந்த நபர் பேசியது முழுக்கவே அபத்தம்.. குற்றம்.
மற்றவர்களுக்கு இல்லாத சக்தி தன்னிடம் இருப்பதாக பேசுகிறார். மூட நம்பிக்கைகளை விதைக்கிறார். பள்ளி மாணவர்களிடம் இவ்வாறு பேசும் போது அவர்களுக்கு மனச் சோர்வு உண்டாகும். ஏற்படும். வாழ்நாள் முழுக்க மன பாதிப்பு ஏற்படும்.

அடுத்து, உடல் பாதிப்பு என்பதை போன ஜென்ம பாவம் என்கிறார். இது எவ்வளவு பிற்போக்குத்தனம்… திமிர்.. அவதூறு!

இங்கே ஒரு விசயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வரலாற்று ஆராய்ச்சியாளர் குடவோலை பாலசுப்ரமணியன் என்னிடம் கூறிய தகவல் இது. புகழ் பெற்ற சோழ அரசனான, பராந்தக சோழன், கண் காட்டுவார் பார்வை அற்ற மாற்றுத் திறனாளிகள் 18 பேரைக் கொண்டு ஒரு குழு அமைத்து, மக்கள் பணியில் ஈடுபடுத்தினான்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விசயம் இது. ஆனல் மகாவிஸ்ணு போன்ற அபத்த நபர்களால் நாம் பின்னோக்கிச் செல்கிறோம்.

அவர், பார்வை மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் இழிவாக பேசுகிறார்.

அவர் எந்தெந்த சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்டார்.. எப்.ஐ.ஆர். விபரம் என்ன  என்பது இப்போது தெரியவில்லை… அதே நேரம், மற்ற சட்டப் பிரிவுகளோடு, மாற்றுத் திறனாளி உரிமை சட்டம்…92 உட்பிரிவு 1-ன் கீழும் அவர் மீது வழக்கப் பதிய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.

இந்த சட்டத்தின் படி, மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்” என்கிறார் பேராசிரியர் தீபக் நாதன்.

Related Posts