‘கொட்டுக்காளி’ ஆனார் சிவகார்த்திகேயன்! தாக்கப்பட்டார் தனுஷ்??.. அப்படிப்பட்ட ஆள் நான் இல்ல.. தனுஷை தாக்கினாரா சிவகார்த்திகேயன்?  

‘கொட்டுக்காளி’ ஆனார் சிவகார்த்திகேயன்! தாக்கப்பட்டார் தனுஷ்??.. அப்படிப்பட்ட ஆள் நான் இல்ல.. தனுஷை தாக்கினாரா சிவகார்த்திகேயன்?  

” இவருக்கு நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்; நான்தான் ரெடி செய்தேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஏனென்றால் நான்தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று என்னை அப்படி சொல்லி சொல்லியே பழக்கிவிட்டார்கள். அப்படிப்பட்ட ஆள் எல்லாம் நான் இல்லை”  என்று கொட்டுக்காளி டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆவேசமாக பேசியிருக்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படங்களை தயாரிப்பதிலும் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில், பிஎஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் கொட்டுக்காளி படத்தை தாயாரித்துவருகிறார்.இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. அதில் சிவகார்த்திகேயன் பேசிய ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி உள்ளது.

இதற்கு ஒரு பிளாஷ்பேக் உள்ளது.

சிவகார்த்திகேயனை வைத்து, 3 மற்றும் எதிர்நீச்சல் படங்களை நடிகர் தனுஷ் தயாரித்தார். இந்த சூழலில், சிவகார்த்திகேயனை தனது பிடியில் வைத்திருக்க தனுஷ் விரும்பியதாக தகவல் பரவியது. பிறகு இருவரும் பிரிந்தனர். அதே நேரம், ‘சிவகார்த்திகேயனை நான்தான் உருவாக்கினேன்’ என்று தனுஷ் பேசி வருவதாகவும் ஒரு தகவல் பரவியது.

இந்நிலையில் கொட்டுக்காளி பட விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், ” என்னைப் பொறுத்தவரை, ‘இவருக்கு நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்; நான்தான் ரெடி செய்தேன்’ என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஏனென்றால் நான்தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று என்னை அப்படி சொல்லி சொல்லியே பழக்கிவிட்டார்கள். அப்படிப்பட்ட ஆள் எல்லாம் நான் இல்லை. ‘இதோ எனது நண்பர் இவர்தான்’ என்று ஒரு அறிமுகம் செய்வோம் இல்லையா. அப்படித்தான் இதனை நான் செய்கிறேன். நீங்கள் கொடுத்த நடிகர் என்ற இடத்திலிருந்து அதை சரியாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.

சிவகார்த்திகேயனின் இந்தப் பேச்சு,  தனுஷை குறிப்பிடுகிறது என்று சமூகவலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.