விமர்சனம்: சிங்கப்பூர் சலூன்
சலூன் கடை நடத்தி வருகிறார் சாச்சா. இவர், முடிெட்டும் ஸ்டைலைப் பார்த்து மயங்குகிறார், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் கதிர். ஆகவே, தானும் முடி திருத்தகம் வைக்க வேண்டும் என தீர்மானிக்கிறார். ஆனால் அதற்கு பல்வேறு விதங்களில் தடை ஏற்படுகிறது. அவற்றை எப்படி தாண்டி, தனது இலக்கை அடைந்தார் என்பதே கதை.
இன்ஜினியரிங் முடித்து, சலூன் கடை வைக்க ஆசைப்படும் ளைஞனாக ஆர்.ஜே.பாலாஜி நடித்து உள்ளார். எப்போதும்போல, டைமிங் காமெடியில் ரசிக்கவைக்கிறார்.
நாயகி மீனாக்ஷி சௌத்ரிக்கு அவ்வளவா வேலை இல்லை. வருகிறார்.. போகிறார்.. அழுகிறார்.
தலைவாசல் விஜய், லால்,கிஷன் தாஸ் உள்ளிட்ட எல்லோருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
கஞ்சத்தனம் மிக்க மாமனாராக வரும் சத்யராஜ் கவர்கிறார்.
விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் சுமார். ஜாவேத் ரியாஸின் பின்னணி இசையும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்றாலும் பாதகமில்லை.
செல்வகுமாரின் எடிட்டிங் சிறப்ப.
பிறப்பின் அடிப்படையில் வேலைகளை ஒதுக்குவது, நிர்ப்பந்திப்பது தேவையில்லை என்கிற கருத்தை நகைச்சுவையுடன் சொல்லும் படம். ரசிக்லாம்.
