“மக்களுக்காகவே வாழ்ந்த புரட்சித் தலைவர்!”: சைதையார் புகழாரம்
மக்கள் திலகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களது 107-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையடுத்து சென்னை தி.நகர் நினைவில்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, சென்னை பெருநகர முன்னாள் மேயரும் மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதையார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது பேசிய சைதையார், “திரைப்படம் ஆனாலும் சரி, ஆட்சியானாலும் சரி, இரண்டையும் மக்களுக்காக பயன்படுத்தினார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.திரைப்படத்தில் சொன்னவற்றை எல்லாம் ஆட்சி அதிகாரம் கிடைத்தபோது நிறைவேற்றினார்.
சக மனிதருக்காக வாழ வேண்டும் என்கிற உண்ரவை, வாழ்வியல் பண்புகளை, கோட்பாடுகளை, கொள்கைகளை இந்த மக்களுக்கு திரைப்பட பாடல் வரிகளாக, வசனங்களாக.. காட்சி அமைப்புகளாக.. இப்படி திரைப்படத்தை அறிவாயுதமாக பயன்படுத்திய ஒரு நடிகர் உண்டு என்றால் உலகத்திலேயே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மட்டுமே!” என்று சைதையர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
