‘சிங்கப்பூர் சலூன்’ டிரைலர் வெளியீடு!!
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’.இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார்.
இந்த படத்திற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.
இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களிலும்,ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
