விமர்சனம்: வீரன்

விமர்சனம்: வீரன்

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்க  ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வீரன். பொதுவாக ஹாலிவுட் சினிமாவில் தான் சூப்பர் ஹீரோ கதைக்களம் கொண்ட படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும்.

அந்த சூப்பர் ஹீரோ கான்செப்ட்டில் தமிழில் எடுக்கப்பட்டு இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தான் வீரன். இதுவே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

வீரனூரில் வாழ்ந்து வரும் கதாநாயகன் குமரன்  சிறு வயதில் மின்னலால் தாக்கப்பட்டு சுய நினைவை இழக்கிறார். உடனடியாக ஆதியை மருத்துவமனையில் அனுமதிக்கினர். மருத்துவர்களின் சிகிச்சையில் இருக்கும் ஆதி எப்போது வேண்டுமானாலும் சுய நினைவுக்கு வரலாம் என மருத்துவர் கூறிவிடுகிறார். இதனால், குமரனை அவரது அக்கா, அழைத்து சென்று விடுகிறார் அங்கு ஆதிக்கு சில நாட்கள் கழித்து நினைவு திரும்புகிறது. நாட்கள் செல்ல செல்ல தனக்குள் மின்னல் சக்தி இருப்பதை ஆதி உணருகிறார்.

அதுமட்டுமின்றி தன்னால் வேறொருவரின் மூளையை கூட கட்டுப்படுத்த முடியும் என்பதை அறிந்து கொள்கிறார்.

சிங்கப்பூரில் இருந்து 14 வருடங்கள் கழித்து மீண்டும் வீரனூருக்கு வருகிறார் குமரன்.

அங்கு தனது சிறு வயது நண்பர்களை சந்தித்து ஆடி பாடி மகிழ்ச்சியாக இருக்கிறார்.

ஆனால், அந்த கிராமத்தில், ரூ. 2000 கோடி மதிப்புள்ள மிகவும் ஆபத்தான திட்டத்தை செயல்படுத்த முயற்சி நடக்கிறது. இந்த திட்டத்தினால் ஏராளமான மக்கள் உயிர் பலியாக வாய்ப்பு உண்டு என்பதும் குமரனுக்கு தெரிகிறது.ஆகவே இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த திட்டமிடுகிறார்.

அவரது முயற்சி வெற்றி பெற்றதா என்பதுதான் கதை.

சூப்பர் பவர் உள்ள இளைஞர் குமரனாக, ஹீரோ ஹிப் ஹாப் ஆதி நடித்து இருக்கிறார்குமரனாக வரும் போதும் சரி வீரனாக வரும் போதும் சரி சிறப்பாக நடித்து உள்ளார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரட்டி விட்டார் .

கதாநாயகி வரும் ஆதிராவுக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை. ஆனாலும் தனக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். மற்றும் ஆதியின் நண்பனாக வரும் சசி  இயல்பாக நடித்து உள்ளார்.முனீஸ்காந்த் – காளி வெங்கட் காமெடி காம்போ ரசிக்கவைக்கிறது. வில்லனாக வரும் வினய்க்கு மிகவும் குறுகிய காட்சிகள் மட்டும் தான். அவருக்கு படத்தில் பெரிதும் ஸ்கோப் இல்லை.

ஆனால், இரண்டாவது வில்லனாக வந்த பத்ரி பட்டையை கிளப்பி விட்டார்.

ஊரில் உள்ள யாரும் வீரன் சாமியை நம்பாத போது, வீரனை மட்டும் நம்பும் முதியவரின் நடிப்பு மிக சிறப்பு.

தீபக் டி. மேனனின் ஒளிப்பதிவு மிரட்டலாக இருந்தது. குறிப்பாக சண்டை காட்சிகளில் ஒளிப்பதிவு மிரட்டலாக இருந்தது. ஆனால் பின்னணி இசை செம மாஸ்.ஊர் எல்லையில் நின்று மக்களைக் காக்கும் எல்லைச்சாமி, நிஜமாகவே நேரில் வந்தால் எப்படி இருக்கும் என்ற கான்சப்ட் நன்றாக ஒர்கவுட் ஆகி இருக்கிறது.  

இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நம்பிக்கைக்கும், மூடநம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக எடுத்து காட்டியுள்ளார்.  

Related Posts