மாஸ்கோ விழா: ‘மாமனிதனை’ தொடர்ந்து ‘சார்பட்டா’வுக்கு அங்கீகாரம்!
மாமனிதன் படத்தைத் தொடர்ந்து சார்பேட்டா பரம்பரை படமும், மாஸ்கோ சர்வதேச பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

மாஸ்கோவில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழா, மிகவும் புகழ் பெற்றது. உலகின் பல்வேறு மொழிகளில் வெளியாகும் சிறந்த படங்கள் இந்த விழாவில் திரையிடப்படும். இது ஒரு கவுரவமான அங்கீகாரமாகும்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில், சீனு ராமசாசமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த மாமனிதன் படம் திரையிடப்பட்டது. இது அப்படத்துக்கு மட்டுமின்றி, தமிழ்த் திரையுலகுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தது.
இந்தநிலையில், இதே விழாவில் விரைவில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா உள்ளிட்டோர் நடித்து வெற்றிபெற்ற சார்பாட்டா பரம்பரை படமும் திரையிடப்பட உள்ளது.
இப்படி தொடர்ந்து இரு தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படுவது மகிழ்ச்சிக்கு உரியதாகும்.

