விமர்சனம்: 800

விமர்சனம்: 800

நடிகர்கள்: மதுர் மிட்டல், மஹிமா நம்பியார், நாசர், நரேன் இசை: ஜிப்ரான் இயக்கம்: எம்.எஸ். ஸ்ரீபதி

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை, திரைப்படமாக இன்று வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் முதலில் நடிகர் விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஹீரோவின் அண்ணனாக நடித்த மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார்.

கதை: வெள்ளையர் ஆட்சியில், தமிழ்நாட்டில் இருந்து, இலங்கை கண்டி பகுதியில் தேயிலை  தோட்ட வேலை செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான மக்களை ஆங்கிலேயர் அழைத்துச் சென்றனர்.  இந்திய வம்சாவளியினரான அவர்கள் இலங்கை குடியுரிமை பெற்று அங்கு வாழ்கின்றனர்.அந்த வம்சாவளியில் வந்தவர்,  முத்தையா முரளிதரன்.  6 வயதில் கிரிக்கெட் பந்தை கையில் எடுத்து போட ஆரம்பித்த முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் என்ன என்ன பிரச்சனைகள் எழுந்தன.. அவற்றில்  இருந்து போராடி எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையாளராக மாறினார் என்பதுதான் படம்.

படத்தின் இயக்குநர் ஸ்ரீபதி முத்தையா முரளிதரனி வாழ்க்கையை முடிந்த வரை சுவாரஸ்யமான திரைப்படமாக கொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக இளைஞர்களிடம் நம்பிக்கையை இந்த படம் விதைக்கிறது. மதுர் மிட்டல்  முரளிதரன் போன்ற தோற்றத்துடன் இருக்கிறார்.. அவராகவே வாழ்ந்துள்ளார்.

ஜிப்ரானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.

அதோடு தமிழர்களின் உரிமை போராட்டத்தையும் முடிந்தவரை நேர்மையாக பதிவு செய்து உள்ளனர்.

சுவாரஸ்யம் + தன்னம்பிக்கை படம்!