இந்திய வனப்பணிக்கான தேர்வில், சைதையாரின், மனித நேயம் பயிற்சி மைய  8 பேர் வெற்றி

இந்திய வனப்பணிக்கான தேர்வில், சைதையாரின், மனித நேயம் பயிற்சி மைய  8 பேர் வெற்றி

150 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்திய வனப்பணிக்கான தேர்வில், சைதை துரைசாமி அவர்களின், மனித நேயம் பயிற்சி மையத்தில் படித்த  8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய வனப்பணிக்கான தேர்வுகளை மத்திய குடிமைப்பணியாளர் தேர்வாணையம்  (யு.பி.எஸ்.சி) ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. முதல் நிலை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் இந்திய வனப்பகுதியில் காலியாக இருக்கும் 150 இடங்களுக்கான அறிவிப்பை மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு வெளியிட்டது.

விண்ணப்பித்தவர்களுக்கான முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை முதன்மை தேர்வு நடந்து முடிந்தது.

முதன்மை தேர்வு முடிவு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அதில் நாடு முழுவதும் 367 பேர் வெற்றி பெற்றிருந்தனர். தமிழ் நாட்டிலிருந்து 35 பேர் இதில் இடம் பிடித்திருந்ததாக சொல்லப்பட்டது.

தேர்வு முடிவுகள் வெளியீடு

முதன்மை தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ஆம் தேதி முதல் கடந்த 1ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களின் இறுதி தேர்வு முடிவுகளின் பட்டியலை யு.பி.எஸ்.சி மே -8 அன்று வெளியிட்டது.பொதுப்பிரிவில் 43 பேரும், பொருளாதாரத்தில் நலிவடைந்தந்தவர்களுக்கான பிரிவில் 20பேரும், ஓ.பி.சி.யில் 51பேரும், எஸ்.சி பிரிவில் 22 பேரும் எஸ்.டி பிரிவில் 11பேரும் என மொத்தம் 147 பேர் கொண்ட பட்டியலை யு.பி.எஸ்.சி வெளியிட்டிருக்கிறது.

பெருநகர சென்னை முன்னாள் மேயரும் கல்வி தந்தை என அழக்கப்படும்  சைதை துரைசாமியை தலைமையாக கொண்டு  செயல்படும் மனித நேய ஐ.ஏ.எஸ்  அகடமி, இந்த பணிக்கான முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முககத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அந்த வகையில் இறுதியாக நேர்முகத் தேர்வுக்கான பயிற்சியில் பங்கேற்றவர்களில் அஸ்வினி, பிரியதர்ஷினி,பாரத் பிரதீவ்,கோவிந்தராம்,கொப்பில்லா கிருஷ்ணா ஸ்ரீ வத்சவ்,பிரசாத், விக்னேஷ்,வினோத், ஆகிய 8பேர் அந்த 147 பேர் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

இதில் ’கொப்பில்லா கிருஷ்ணா ஸ்ரீ வத்சவ்’ அகில இந்திய அளவில் 52 வது  இடத்தை பெற்றுள்ளார்.

மனித நேய மையத்தில் படித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி தந்தை மனித நேயர் சைதை துரைசாமி அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Related Posts