கோவை 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு  தூக்கு…!

கோவை; துடியலூர் அடுத்த பன்னீர்மடை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி 1-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த மார்ச் 25-ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார்.

குழந்தையை காணமால் பதறிப் போன பெற்றோர் துடியலூர் போலீசில் புகார் அளித்தனர், தேடுதல் பணி தீவிரமானது. சிறுமி காணாமல் போன அடுத்த நாள் வீட்டின் பின்பக்கம் ஒரு துணியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் சிறுமி.

இது தொடர்பாக  போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்டில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு சம்பந்தமாக போலீசார் 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்ட  நிலையில்தான், சந்தோஷ்குமார் என்பவனை மார்ச் 31-ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

கைது செய்து விசாரித்ததில்  உளியம்பாளையத்தை செர்ந்த சந்தோஷ்குமார் 32 வயது என தெரியவந்தது. பாலியல் பலாத்காரம், கொலை தடயங்களை மறைத்தல், போக்சோ என 4 பிரிவில் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சாட்சிகள் இதுதொடர்பான வழக்கும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ராதிகா முன்னிலையில் நடந்து வந்தது.. இரு தரப்பின் இறுதி வாதங்களும் நேற்று முடிவடைந்த நிலையில்.. அரசு தரப்பில், 26 சாட்சிகளும், எதிர் தரப்பில் ஆறு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். அதனால் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக இன்னொருவருக்கும் தொடர்பு உள்ளதாக  சிறுமியின் தாய் வனிதா கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். வழக்கை மறுவிசாரணை நடத்தி, இன்னொரு குற்றவாளியையும் தேடி கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்றும், டிஎன்ஏ ஆய்வு முடிவுகளை மேற்கோள்கட்டி கூடுதலாக பெண் அதிகாரி நியமனம் செய்து திரும்பவும் இந்த வழக்கை விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

எனினும் இந்த வழக்கு இறுதி வாதங்கள் முடிந்த நிலையில், இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. சந்தோஷ்குமார் குற்றவாளி என கூறி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

 மேலும் சந்தோஷ்குமாரின் தண்டனை குறித்து 3 மணியளவில் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.  இதைதவிர மேலும் சிறுமியின் தாய் நேற்று கொடுத்த  புகார் மனு தொடர்பாகவும் வழக்கு விசாரணையும் நடந்து கொண்டிருந்தது.

மதியம் உணவு இடைவேளை முடிந்து 3 மணியளவில் மீண்டும் நீதிமன்றம் கூடியது.. சந்தோஷ்குமாருக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் , 302 பிரிவின் கீழ் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.