ஹிஜாப் அணியாத பெண்களுக்கு 10 ஆண்டுகள் சிறை!

ஹிஜாப் அணியாத பெண்களுக்கு 10 ஆண்டுகள் சிறை!

டெஹ்ரான்: ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாத பெண்களுக்கு 10 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கும் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஈரானில் பொதுஇடங்களுக்கு செல்லும் பெண்கள் முகத்தை மறைக்கும் ஹிஜாப் அணிய வேண்டும், அவர்களின் உடலை மறைக்க நீண்ட, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும் என்பது விதி. கடந்த ஆண்டு ஹிஜாப் அணியாமல் சென்றதாக காவலில் வைக்கப்பட்டிருந்த இளம்பெண் மஹ்சா அமினி(22) உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில் போராட்டங்கள் நடந்து ஓராண்டை கடந்துள்ள நிலையில், 290 உறுப்பினர்களை கொண்ட ஈரான் நாடாளுமன்றத்தில் 152 உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

அதன்படி, “பொது இடங்களில் ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்கள், அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Posts