“கண்ணீர் துடைப்போம் வாருங்கள்!”: அழைக்கிறது மதுரா டிராவல்ஸ்!

“கண்ணீர் துடைப்போம் வாருங்கள்!”: அழைக்கிறது மதுரா டிராவல்ஸ்!

உலக அளவில் சுற்றுலா துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று மதுரா டிராவல்ஸ் என்பதை அனைவரும் அறிவோம். அதே போல, சமூக  சேவை புரிவதிலும் இந்நிறுவனம் சளைத்ததில்லை என்பதும் நமக்குத் தெரியும்.

இந்த வரிசையில், வயநாடு பேரழிவில் சிக்கிய மக்களுக்கு நிவாரணம் அளிப்பதிலும் க கை கொடுத்து உள்ளது மதுரா டிராவல்ஸ் நிறுவனம்.

பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மக்களுக்கு நிவாரண நிதியாக, ஒரு லட்ச ரூபாயை, தமிழ்நாடு முதலமச்சர் நிவாரண நிதிக்கு அளித்து உள்ளது, மதுரா டிராவல்ஸ்.

இது குறித்து மதுரா டிராவல்ஸ் அதிபர் கலைமாமணி வி.கே.டி. பாலன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:

உலக அளவில் முன்னணி நிறுவனஅன்பான சகோதர சகோதரிகளே,

வயநாடு பாரிய நிலச்சரிவுகளால் பலர் தங்கள் உயிர்களையும், குடும்பங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளனர் மற்றும் சமீபத்திய பேரழிவின் காரணமாக அவர்களின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளனர். எங்கள் அனுதாபத்தை விட, எங்கள் பங்களிப்புகள் இந்த கடினமான காலங்களில் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும்.

மதுரா டிராவல் சர்வீஸ் (பி) லிமிடெட் ரூ. 1,00,000/- (ஒரு லட்சம்).

*வயநாடு மறுவாழ்வுக்கான முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு உங்கள் காசோலையை வழங்குவதன் மூலம் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். காசோலைகளை பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்:

கலைமாமணி வி.கே.டி. பாலன்
தலைவர், தமிழ்நாடு சுற்றுலா, பயணம் மற்றும் விருந்தோம்பல் சங்கம்
எண். 44, தேவ் அபார்ட்மெண்ட்
4வது அறக்கட்டளை குறுக்குத் தெரு
மண்டவெளிப்பாக்கம்
சென்னை 600 008
தமிழ்நாடு

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்: +91 98410 78674.

Related Posts