எல்லோருக்கும் ஒரே கோவில்’’ மதங்களை இணைக்கும் ராகவா லாரன்ஸ்!

கோவில் கட்டி மதங்களை இணைக்கும் முயற்சியில்  ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் நடனக் கலைஞராக  தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர்.  சமூகம் சார்ந்த சிந்தனைகளையும் சமூக சேவைகளையும் மேலும் அவர் தனது அறக்கட்டளையின் மூலமாக எத்தனையோ உதவிகளையும் செய்து வருகிறார். இப்போது அவர் மூன்று மதங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு அசாத்திய விசயத்தை கையில் எடுத்துள்ளார்.மத வேறுபாடுகளை கடந்து மனிதம் தான் பெரிது என்பதை உணர்த்தும் வகையில் இந்து கிறிஸ்டின், முஸ்லீம் ஆகிய மூன்று மதத்தினரும் வந்து வழிபடும் படி ஓர் கோவிலை  அமைக்க இருக்கிறார். மதங்களாலும் சாதிகளாலும் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள் அதனால் தான் இந்த முயற்சியை எடுக்கவிருப்பதாக கூறுகிறார்.

நெருப்பிற்கும் பசிக்கும் சாதி மதம் தெரியாது. அந்த வகையில் அனைவரும் சமமாக உணவருந்த அந்த ஆலயத்தில் அண்ணதான கூடம் அமைக்கப்பட்டு அனைவரின் பசிக்கும் உணவு வழங்க இருக்கிறார். இந்த அறப்பணி இதுவரை யாருமே சிந்திக்காத ஒரு முயற்சி.  ராகவேந்திரர் சுவாமியின் பிறந்த நாளான இன்று இதை  அறிவித்துள்ளார். இந்தப்பணிகளை மிகச்சிறப்பாக விரைவில் துவங்க உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

Related Posts