தலைப்புக்கு தடை! தள்ளிப்போகும் ‘வடக்கன்’!

தலைப்புக்கு தடை! தள்ளிப்போகும் ‘வடக்கன்’!

‘வடக்கன்’ படத்தின் தலைப்புக்கு சென்சார் போர்டு தடை விதித்துள்ளதால், பட வெளியீடு தள்ளிப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி  எம்டன் மகன் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியிருந்தார்.  அழகர்சாமியின் குதிரை படத்தின் கதை,வசனமும் இவரே.  சின்னத்திரை தொடர்கள் பலவற்றுக்கும் வசனம் எழுதி உள்ளார்.

இந்த நிலையில், ‘வடக்கன்’ என்ற பெயரில் திரைப்படத்தை இயக்கி முடித்து உள்ளார். டிஸ்கவரி சினிமாஸ் மூலமாக புத்தக பதிப்பாளர் வேடியப்பன் தயாரிக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு வந்து  வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களைப் பற்றிய படமாக இப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தை இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி தன்னுடைய திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலமாக வெளியிடுகிறார்.

இப்படம், வரும் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக, படக்குழு அறிவித்து இருந்தது.  இந்நிலையில், ‘வடக்கன்’ என்ற தலைப்புக்கு, சென்சார் போர்டு தடை விதித்து உள்ளதால் வெளியீடு தள்ளிப்போகிறது.

தலைப்பு மாற்றப்பட்டு, புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு அறிவித்து உள்ளது.

 

 

Related Posts