Zee5 இன் தலைமைச் செயலகம்: விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் பாராட்டு!
இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமான Zee5-ல் , பொலிடிகல் த்ரில்லரான ‘தலைமைச் செயலகம்’ சீரிஸ், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது.
ராடான் மீடியாவொர்க்ஸ் சார்பில் ராதிகா சரத்குமார் தயாரிக்க, வசந்தபாலன் இயக்கத்தில், கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடித்துள்ளனர்.
இந்த சீரிஸ் விமர்சகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, திரைப்பிரபலங்களிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
இந்த சீரிஸ் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “இப்போதுதான் @வசந்தபாலன் சார் இயக்கிய #தலைமைச்செயலகம் பார்த்தேன், இந்த அரசியல் சீசனுக்கான மிக அட்டகாசமான சீரிஸ்! 👏 ராதிகா மேமுக்கு பாராட்டுக்கள் ❤️❤️ கிஷோர் பிரில்லியண்ட், ஸ்ரீயா ரெட்டி மாம் 👍👍👏👏❤️ #Bharat” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில், “வசந்த பாலன் மீண்டும் ஒரு தலைசிறந்த படைப்பை வழங்கியுள்ளார்! தலைமைச் செயலகம் இந்த அரசியல் சீசனில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய சீரிஸ். உழைத்த அனைவருக்கும் பெரிய வாழ்த்துக்கள்! Zee5 இல் கண்டுகளியுங்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

