சாதனை படைக்கும் ஜீ5 இன் ‘சட்டமும் நீதியும்’! முதல் பகுதியை இலவசமாக காணலாம்!

சாதனை படைக்கும் ஜீ5 இன் ‘சட்டமும் நீதியும்’! முதல் பகுதியை இலவசமாக காணலாம்!

ZEE5 இன் புதுமையான, தனித்துவமான விளம்பரங்கள், மக்கள் மத்தியில் சீரிஸ் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. மக்களை பார்க்கத் தூண்டும் வகையில், ZEE5 ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் முதல் எபிஸோடை,  இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் சந்தாதரர்கள் அல்லாத அனைவரும்  ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் முதல் எபிஸோடை கண்டுகளிக்கலாம்.  சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.