‘சார்’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் திரைப்படம் குறித்தி தகவல் வெளியாகியுள்ளது.
படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று பெயரிட்டு பின் சார் என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
கன்னி மாடம் படத்தை இயக்கிய போஸ் வெங்கட் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் பருத்திவீரன் சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் டீசர் கவனம் பெற்றது. சமீபத்தில் படத்தின் புதிய பாடலை வெளியிட்டனர். சித்து குமார் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், படம் வரும் அக்.18ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தை வெற்றிமாறன் வழங்குகிறார்.
