கமல் சிம்பு மோதல்! மிரட்டும் அதிரடி தக் லைஃப் ட்ரைலர்!

கமல்  சிம்பு மோதல்! மிரட்டும் அதிரடி தக் லைஃப் ட்ரைலர்!

கமல், சிம்பு, மணிரத்னம் கூட்டணியில் உருவாகி இருக்கும் தக்லைப் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது

மேலும் இப்படத்தில் , த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இப்படம் ஜூன் ஐந்தாம் தேதி வெளியாகும் நிலையில் தற்போது படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தீவிரமாக செய்து வருகின்றது.

வருகின்ற மே 24 ஆம் தேதி தக் லைப் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியிருக்கிறது.

எதிர்பார்த்ததை போலவே தக்லைப் திரைப்படத்தின் ட்ரைலர் தீயாய் உள்ளது என்றே சொல்லலாம். ட்ரைலரை பார்க்கும்போது இப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படமாகவே இருக்கும் என தெரிகின்றது. குறிப்பாக சிம்பு மற்றும் கமல் மோதும் காட்சிகள் செம பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தாதாவாக கமல்ஹாசன், குட்டி தாதாவாக சிம்பு இருவரும் தங்களுக்கே உரிய உடமொழிகளுடன் பிணைப்புடன் ஆரம்பித்து, எதிரெதிர் துருவங்களாக உருவெடுப்பதாக திரைக்கதை நகர்வதை ட்ரெய்லர் காட்சிகள் உறுதி செய்கின்றன. கமல்ஹாசனின் கெட்டப்புகளும் வசன உச்சரிப்புகளும் தனித்து கவனம் ஈர்க்க, இன்னொரு பக்கம் சிம்புவின் ஆக்‌ஷனில் அனல் பறக்கிறது.

நறுக்கென தெறிக்கும் வசனங்களுக்கு இடையே ஆக்‌ஷன் காட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இடையிடையே வருகின்ற ரொமான்ஸ் ஷாட்களும், துணைக் கதாபாத்திரங்களின் பிரசன்ஸும்தான் இது மணிரத்னம் படம்தான் என்பதை பறைசாற்றுகின்றன. அதேபோல், ரஹ்மானின் இசையும் கச்சிதமாக அழுத்தத்தை கூட்ட துணைபுரிந்திருக்கிறது.

மணிரத்னம் படங்களுக்கே உரிய நிதானமும் அழுத்தமும் இருக்குமா, மிஸ் ஆகுமா என்பதை வெள்ளித் திரையில்தான் காண வேண்டும். ‘நாயகன்’ பாணியில் இல்லாமல், சமகால ஆக்‌ஷன் பட பாணியில் ஒட்டுமொத்த படமும் இருக்கக் கூடும் என்பதையே ‘தக் லைஃப்’ ட்ரெய்லர் உணர்த்துகிறது. குறிப்பாக, இளம் ரசிகர்களை ஈர்க்கக் கூடிய வகையிலேயே ஆக்‌ஷன் பேக்கேஜாக ட்ரெய்லர் கட் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது

தக்லைப் படத்தின் ட்ரைலரை பார்க்கும்போது முதல் பாதியில் சிம்பு மற்றும் கமல் ஒன்றாக இருப்பதை போலவும், இரண்டாம் பாதியில் இருவரும் நேருக்கு நேர் மோதுவது போலவும் திரைக்கதை இருக்கும் என கணிக்கப்படுகின்றது. எது எப்படி இருந்தாலும் ரசிகர்களுக்கு தக்லைப் செம ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் தக்லைப் திரைப்படத்தின் ட்ரைலரை பார்த்த அனைவரும் பாசிட்டிவான கருத்துக்களை தான் கூறி வருகின்றனர். ட்ரைலர் மிரட்டலாக இருக்கு என்றும், கமல் vs சிம்பு மோதலை திரையில் பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் அனைவரும் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

மேலும் தக்லைப் ஒரு ஆக்ஷன் படம் என்பதால் கண்டிப்பாக விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது, குறிப்பாக ட்ரைலரில் வரும் ஏ.ஆர் ரஹ்மானின் பின்னணி இசை செம மிரட்டலாக உள்ளது என ஒட்டுமொத்தமாக ரசிகர்கள் இந்த ட்ரைலருக்கு பாசிட்டிவான விமர்சனங்களை தான் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

 

 

https://www.youtube.com/watch?v=96kAbj3IF3k

Related Posts