பிரபாஸை பிரம்மாண்ட முறையில் காட்சிப்படுத்தும் ‘சலார்’ பட டிரைலர் வெளியானது..!

பிரபாஸை பிரம்மாண்ட முறையில் காட்சிப்படுத்தும் ‘சலார்’ பட டிரைலர் வெளியானது..!

‘கே ஜி எஃப் சீரிஸ்’ போன்ற பிரம்மாண்டமான பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கிய ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மிகவும் எர்பார்க்கப்பட்ட ‘சலார்’ படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை தனித்துவமான பாணியில் வெளியிட்டு, வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கி உள்ளது. இந்த முன்னோட்டம்- அடக்க இயலாத பிரபாஸுடன் தொடங்குகிறது. இத்தகைய காட்சிகளில் வழங்கப்படும் மயக்கும் அழகியல் காட்சிகள் மற்றும் துடிப்பான சண்டை காட்சிகள் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.‌

இந்தியா முழுவதும் 5000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘சலார்’- ஒரு சினிமா கொண்டாட்டமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. மேலும் சமீபத்திய ட்ரெய்லரில் கான்சார் எனப்படும் உலகத்தையும், பிருத்விராஜ் மற்றும் பிரபாஸ் என்ற இரு நண்பர்களின் புதிரான கதையையும், கவர்ந்திழுக்கும் காட்சிகளுடன் வழங்குகிறது. முரட்டுத்தனமான கதாபாத்திரத்தை சித்தரிக்கும் பிரபாஸ்.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.‌

ட்ரெய்லர் ஒரு அழுத்தமான விவரிப்புடன் தொடங்குகிறது. கான்சார் நகரை சுற்றியுள்ள கதை மற்றும் பிருத்விராஜ்- பிரபாஸ் இடையேயான நட்புடன் பார்வையாளர்களை மூழ்கடிக்கிறது.‌ காட்சிகள் தொடர்ந்து விரிவடையும்போது, பிரபாஸ் இதுவரை கண்டிராத அவதாரத்தில் தோன்றுகிறார். அவரது தீவிரமான மற்றும் கட்டளை தொனியுடன் கூடிய தோற்றத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்துகிறார்.

ட்ரெய்லரின் கிளைமாக்ஸ் காட்சி பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் வரவழைத்து, பல அதிர்ச்சிகரமான கேள்விகளை முன் வைக்கிறது. பிருத்விராஜ் மற்றும் பிரபாஸ் இடையே இருந்த பிரிக்க முடியாத நட்பு… எப்படி கசப்பான பகையாக மாறியது? இந்த முத்தாய்ப்பான காட்சி.. ‘சலார்’ நகரம் முழுவதும் தொடர்ந்து பேசப்படுவதை உறுதி செய்கிறது. மேலும் அப்படத்தின் உடனடி வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.

சலாரில் உள்ள கதாபாத்திரங்கள் வசீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டிருக்கின்றன. இது தேசம் முழுவதிலும் உள்ள ரசிகர்களிடம் நிச்சயம் எதிரொலிக்கும் வகையிலான பெரியதொரு தோற்றத்தை கொண்டுள்ளது. கதையுடன் திறமையாக பின்னி பிணைந்திருக்கும் இசை… ஒட்டுமொத்த சினிமா அனுபவத்தையும் உயர்த்தி, ‘சலார்’ என்ற பிரம்மாண்டத்திற்கு சுவை கூட்டுகிறது.

Related Posts