இமயத்தை இயக்கிய மகன் மனேஜ்!

இமயத்தை இயக்கிய மகன் மனேஜ்!

பாரதிராஜா இயக்கிய தாஜ்மகால் படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் தடம் பதித்தார் அவரது மகன் மனோஜ். தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், ஈர நிலம், மகா நடிகன், வாய்மை, மாநாடு உள்பட பல படங்களில் நடித்தார்.

மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

தற்போது இவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்க உள்ள படத்தில் புதுமுக நடிகர், நடிகைகள் முதன்மை வேடங்களில் நடிக்க உள்ளனர். பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டைரக்டர் சுசீந்திரன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.

படம் குறித்து மனோஜ் கூறும்போது, “குடும்ப பாங்கான கதையம்சத்தில் அனைவரும் ரசிக்கும் படமாக தயாராகிறது. இளைஞர்களை கவரும் அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கும். இசைக்கும் முக்கியத்துவம் இருக்கும். முதல் படத்திலேயே எனது தந்தையை இயக்குவது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

Related Posts