“இளையராஜாவுக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ்தான்!”:தங்கர் நெகிழ்ச்சி!

“இளையராஜாவுக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ்தான்!”:தங்கர் நெகிழ்ச்சி!

வ. கௌதமன் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம், ‘படையாண்ட மாவீரா’ .  இத் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘ ‘நிழல்கள்’ ரவி , உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜி.வி பிரகாஷ் குமார் இசை அமைதது உள்ளார்.

வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி, இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், நடிகர் ஏகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் – நடிகர் தங்கர் பச்சான் பேசுகையில், ‘ வன்முறையாகட்டும், மொழிக்கு எதிராக இந்த மண்ணுக்கு எதிராக எது நடந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழன் கௌதமன்.  இந்த நாட்டில் ஒடுக்கப்படுகிறவர்கள் தமிழர்கள் தான். அழிக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும் தமிழ் மொழிதான். இதற்கு எதிராகவும் தமிழ் மொழியை பாதுகாப்பதற்காகவும் தமிழகத்தில் அவ்வப்போது தோன்றிய மனிதர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் இலக்கியங்களாகவும், எப்போதாவது ஒருமுறை திரைப்படங்களாகவும் வருகிறார்கள்.

படத்தில் பாடல்கள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இளையராஜாவுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ்தான் மனதைக் கவர்கிறார்.

மாவீரன் குருவுடன் நாங்கள் எல்லாம் அரசியல்வாதியாக இல்லாமல் தமிழனாக பழகி இருக்கிறோம். அவர் மிகவும் இளகிய மனம் கொண்டவர்.

வைரமுத்து ஆளுக்கு ஏற்றமாதிரி, இடத்துக்கு ஏற்ற மாதிரி, நேரத்துக்கு ஏற்ற மாதிரி பேசுவார். போகட்டும்.

இந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தப் படத்தை பார்த்த பிறகு மக்களிடத்தில் ஒரு தாக்கம் ஏற்பட வேண்டும். ஒரு படைப்பு மக்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு படைப்பாக இந்த படையாண்ட மாவீரா இருக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.

Related Posts