ஹனுமான் பட நடிகர் தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படம்

தேஜா சஜ்ஜா பிறந்தநாளில், பீப்பிள் மீடியா பேக்டரியுடன் இணையும் புதிய படம் – பிரம்மாண்ட கான்செப்ட் போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது ! இப்படம் 2027 சங்கராந்திக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது !!
‘ஹனுமான்’ படம் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்ற சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூப்பர் யோதா திரைப்படமான “மிராய்” படத்தில் நடித்து வருகிறார். நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் அடுத்த படைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேஜா சஜ்ஜா – பீப்பிள் மீடியா பேக்டரி கூட்டணியின் இரண்டாவது திரைப்படமாகும்.
TG விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரிக்கும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில், உயர்தரமான தொழில் நுட்ப அம்சங்களுடன் உருவாக உள்ளது.
இன்று வெளியிடப்பட்ட கான்செப்ட் போஸ்டர் அசத்தலான அம்சங்களுடன் கண்கவரும் வகையில் அமைந்துள்ளது. கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் ஆதிக்கம் செலுத்தும் அந்த போஸ்டர், நடிகரின் டிரேட் மார்க் “ராக் ஆன்” சைகையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆனால் அது சாதாரண சைகையாக அல்லாமல், வீடியோ கேம் கன்ட்ரோலரை பற்றியிருப்பது கதைக்களத்திற்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
போஸ்டரில் இடம் பெற்றுள்ள – “ராயலசீமா முதல் உலக எல்லை வரை” – எனும் டேக்லைன் கதையின் வேர்கள் ஆந்திர பிரதேசத்தில் இருந்தாலும், உலகம் முழுவதும் உணரக்கூடிய படைப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
இந்த பான்-இந்தியப் படம் சங்கராந்தி 2027-இல் பிரம்மாண்ட திரையரங்க வெளியீடாக வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் தேஜா சஜ்ஜாவின் அடுத்த திரை முயற்சி குறித்த, எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.