‘தமிழ்’ கிருஷ்ணா நடிக்கும் 25-வது திரைப்படம் ‘KK 25’

அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கிருஷ்ணா அடுத்து இருவர் படத்தில் நடித்தார். நாயகனாக அலிபாபா, கற்றது களவு, கழுகு, யாமிருக்க பயமே, உள்ளிட்ட படங்களில் நடித்தார். மாரி 2 படத்தில் தனுஷுடன் முக்கிய வேடத்தில் தோன்றினார்.
அந்த வரிசையில், நடிகர் கிருஷ்ணா தன் திரைப்பயணத்தில் 25-வது திரைப்படம் எனும் மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த திரைப்படம் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதையசம் கொண்டுள்ளது.
தற்போதைக்கு “KK 25” என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தை மனு மந்த்ரா கிரியேஷன்ஸ் சார்பில் மஹேந்திர ராஜ் சந்தோஷ் குமார் தயாரிக்கிறார்.இந்தப் படத்தை இயக்குநர் பால கிருஷ்ணன் இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் இவர்கள் இருவரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் திரைத்துறையில் களமிறங்குகின்றனர். முன்னதாக இயக்குநர் பால கிருஷ்ணன் ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’ திரைப்படத்தின் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.